ETV Bharat / state

இந்தாண்டு சென்னை காற்றின் தரம் - தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியீடு!

author img

By

Published : Oct 29, 2019, 8:22 PM IST

சென்னை: காற்று மாசு சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவது வழக்கம். சில ஆண்டாகவே மக்களிடையே விழிப்புணர்வு, நீதிமன்றக் கட்டுப்பாடு போன்றவையால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது.

இதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் வாரத்தில் காற்றில் மாசு எவ்வளவு உள்ளது என ஆராய்ச்சி செய்துவருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி அன்று சென்னையில் ஐந்து இடத்தில் நடத்திய ஆய்வில் காற்றின் மாசு சென்ற வருடத்தை விடக் குறைந்து உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோ கிராமைவிட 128 மைக்ரோ கிராம் (Particulate matter(PM) 10) உள்ளதாகப் பதிவாகியுள்ளது. சென்னையில் 2018ஆம் ஆண்டில் எடுத்த ஆய்வில் காற்றின் மாசு 48 முதல் 114 மைக்ரோ கிராம் பதிவாகியது. அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் சென்னையில் இந்தாண்டு காற்றின் மாசு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய ஆய்வின்படி சென்னையில் வேளச்சேரி பகுதி தீபாவளி அன்று காற்றின் மாசு மிகவும் மாசுடன் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. காற்றின் நுண்துகள் 2.5 என்னும் அளவில் இருக்க வேண்டும். ஆனால் வேளச்சேரியில் அதிகபட்சமாக 430 ஆகப் பதிவாகியுள்ளது.

430 மைக்ரோ கிராம் என்பது உடல்நலத்தை மிகவும் பாதிக்கும் அளவு என்பது வேதனையான விஷயம். அதேபோல் மணலி, ஆலந்தூர் ஆகிய பகுதிகளிலும் காற்றின் மாசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு ஆய்வின்படி அதிகமாகப் பதிவாகியுள்ளது.

Intro:Body:சென்னையில் கற்று மாசு சென்ற வருடத்தை விட குறைவு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதால் கற்று மாசு அடைவது தொடர் வழக்கம். சில வருடங்களாக மக்களிடையே விழுப்புணர்வு மற்றும் நீதிமன்ற கட்டுப்பாடு போன்றவையால் கற்று மாசு கட்டு படுத்தப்பட்டு வருகிறது.


இதன்படி தமிழ்நாடு மாசு கட்டப்பட்டு வாரியம் தீபாவளி வரும் வாரத்தில் காற்றின் மாசு எவ்வாறு உள்ளது என ஆராய்ச்சி செய்யும். அதன்படி தற்போது இந்த வருடம் தீபாவளி அன்று சென்னையில் ஐந்து இடத்தில நடத்திய ஆய்வில் காற்றின் மாசு சென்ற வருடத்தை விட குறைந்து உள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக சௌகார்பேட்டையில் காற்றில் மிதக்கும் நுண்துகள் நிர்ணியக்கப்பட்ட அளவு 100 மைக்ரோ கிராமை விட 128 மைக்ரோ கிராம் (PM10) என பதிவாகியுள்ளது, அதேபோல் PM2.5 என்னும் நுண்துகள் நிர்ணியக்கப்பட்ட 60 மைக்ரோ கிராமை விட 62 மைக்ரோ கிரமாக பதிவாகியுள்ளது. சென்னையில் 2018 ஆம் ஆண்டில் எடுத்த ஆய்வில் காற்றின் மாசு 48  முதல் 114 மைக்ரோ கிராம் பதிவாகியது. அதை ஒப்பிட்டு பார்க்கையில் சென்னையில் இந்த வருடம் காற்றின் மாசு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டப்பட்டு தெரிவித்துள்ளது.

ஆனால் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வின் படி சென்னையில் வேளச்சேரி பகுதி தீபாவளி அன்று காற்றின் மாசு மிகவும் மாசுடன் இருப்பதாக பதிவாகியுள்ளது. PM2.5 என்னும் காற்றின் நுண்துகள் வேளச்சேரியில் அதிகபட்சமாக 430 ஆக பதிவாகியுள்ளது. 430 மைக்ரோ கிராம் என்பது உடல்நலத்தை மிகவும் பாதிக்கும் அளவு என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணலி, ஆலந்தூர் ஆகிய பகுதிகளிளும் காற்றின் மாசு மத்திய மாசு கட்டுப்படி ஆய்வின் படி அதிகமாக பதிவாகியுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.