ETV Bharat / state

திருடு போன செல்போனை கண்டுபிடிப்பது எப்படி? - புதிய இணையதளம் தொடக்கம்!

author img

By

Published : Aug 9, 2023, 7:50 PM IST

செல்போன் தொலைந்து போனால் கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறையின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: CEIR (central equipment identity register) மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக , செல்போனை தொலைத்தவர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகிய இருவரும் ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தி செல்போனை 24 மணி நேரத்தில் முடக்க முடியும். அவ்வாறு முடக்கப்பட்ட செல்போனில் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட, செல்போன் தொலைத்தவர் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி செல்லும்.

அதே குறுஞ்செய்தி செல்போன் தொலைத்தவர்களுக்கும் தொலைத்தவர்கள் புகார் அளித்த காவல் நிலையத்திற்கும் செல்லும். இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் செல்போன் வாங்குவதற்கு முன்பாக எவ்வளவு பழமையான செல்போன் என்பது குறித்து ஐஎம்இஐ நம்பர் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.மேலும் உங்கள் பெயரில் எத்தனை செல்போன் சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

Know Your Mobile App
Scan and Download Know Your Mobile App

தமிழ்நாட்டில் சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபி சஞ்சய் குமார் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினருக்குத் தொலைதொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து, இந்த இணையதளத்தில் பயன்படுத்துவதற்கான லாக் இன் ஐடிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

செல்போன் நெட்வொர்க் சேவை அளிப்பவர்கள் தொடர்ந்து காவல் துறையினருக்குத் தொலைந்து போன மற்றும் திருடு போன செல்போன்கள் இருக்கும் இடங்கள் குறித்து தகவல்கள் கொடுக்கும். இந்த தொழில்நுட்ப வசதியுடன் காவல் துறையினர் மூலமாக செல்போனை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஐஎம்இஐ நம்பரை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் இதுவரை திருடப்பட்ட மற்றும் தொலைந்துபோன செல்போன்களில் புதிதாக 25ஆயிரத்து 135 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 846 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காரைக்குடியில் வாகனத்தை முந்தி செல்வதில் தகராறு; கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.