ETV Bharat / state

சிசிடிவி:  எலக்ட்ரிக்கல் கடையில் தீக்குச்சிகல் உதவியுடன் திருட்டு

author img

By

Published : Oct 16, 2022, 6:59 AM IST

சென்னை ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீக்குச்சிகள் உதவியுடன் பொருட்களை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி:ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீப்பெட்டி உதவியுடன் திருட்டு!
சிசிடிவி:ஆவடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் தீப்பெட்டி உதவியுடன் திருட்டு!

சென்னை: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்த மானக்ராம் என்பவர் ஸ்ரீ ராம் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல வியாபாரம் முடிந்து கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் ஷெட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிசிடிவி

உடனடியாக கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.16,000 பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பட்டாபிராம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்பின் கடையின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் இரண்டு இளைஞர்கள் ஷெட்டரை உடைத்து கடையின் உள்ளே சென்று தான் வைத்திருந்த தீப்பெட்டியில் தீக்குச்சியை பற்றவைத்து அந்த வெளிச்சத்தில் கல்லா பெட்டியில் இருக்கும் பணத்தையும், அங்கிருந்த உண்டியல் பணத்தையும் திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த 3 செல்போன்கள், 10-க்கும் மேற்பட்ட டிரைவ், ஹெட்செட், வானொலி பெட்டி உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு சென்றுள்ள காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:கோவை எம்ஜிஆர் சந்தையை சூழ்ந்த மழை நீர்! - அவதியடைந்த மக்கள்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.