ETV Bharat / state

ஓட்டுக்குப் பணம் பெறுவதற்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு

author img

By

Published : Feb 14, 2022, 3:30 PM IST

தேர்தலில் ஓட்டுக்குப் பணம் பெறுவதற்கு எதிராகப் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அளித்த கோரிக்கை மனுவை இரு நாள்களில் மறுபரிசீலனை செய்யும்படி, கோவை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் சென்னை
உயர் நீதிமன்றம் சென்னை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாநகராட்சியில், ஓட்டுக்குப் பணம் பெறுவதற்கு எதிராகப் பரப்புரை செய்ய அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஈஸ்வரன் மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்திருந்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோரிடம் அளித்த மனு மீது எவ்வித பதிலும் அளிக்காமல், அலைக்கழிக்கப்பட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோரது அமர்வு, பணம் கொடுத்து வாக்குகள் பெறுவது அனுமதிக்கத்தக்கதல்ல எனவும் அதைக் கண்காணிக்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பியது.

தற்போது பரப்புரைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மனுதாரரின் கோரிக்கை மனுவை இரு நாள்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: மாணவி தற்கொலை வழக்கு - தந்தைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.