ETV Bharat / state

சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரில் கணவர் அரணவ் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Oct 8, 2022, 10:42 PM IST

கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாக சின்னத்திரை நடிகை திவ்யாவை அளித்த புகாரில், அவரது கணவரும் சின்னத்திரை நடிகருமான அரணவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

case
case

சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யா, தனது கணவரும் சின்னத்திரை நடிகருமான அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். கணவருக்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னை விட்டு சென்றதாகவும், தான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திவ்யா கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை அரணவ் மறுத்தார். இதையடுத்து அரணவ் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். அரணவ் அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரணவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் திவ்யா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே இன்று திவ்யா மனரீதியான பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதற்கான மருத்துவ சீட்டையும், அவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளையும் சமூக வலைதளத்தில் அரணவ் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் திவ்யா அளித்த புகாரின் பேரில், போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரணவ் அளித்த புகாரில் வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: கருவை கலைக்க சின்னத்திரை நடிகை திவ்யா முயற்சி - கணவர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.