ETV Bharat / state

கடகம் ராசிக்கு புத்தாண்டு பலன் 2024: உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:43 PM IST

Cancer New Year Rasipalan: 2024ஆம் ஆண்டில் கடக ராசிக்காரர்களுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

2024 Cancer Rasipalan in Tamil
2024ம் ஆண்டில் கடக ராசிக்காரர்களின் ராசி பலன்

சென்னை: அதிக உணர்திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே, உறவினர்களுடன் இருப்பதே உங்களின் விருப்பமாக இருக்கும். இந்த ஆண்டு உணர்ச்சிகரமான அணுகுமுறையைக் காட்டிலும் நடைமுறை அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அதிக பயனடையலாம். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் வருவாயை உயர்த்த முயற்சிப்பீர்கள்.

குடும்பம் சார்ந்த செயல்களில் கவனத்தைச் செலுத்துவதோடு அவர்களின் உதவியுடன் சில முக்கிய முடிவுகளையும் எடுப்பீர்கள். இந்த ஆண்டு குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தையோ அல்லது நீண்ட காலமாக குடும்பத்தில் இருக்கும் நிறுவனத்தையோ நிர்வகித்தால், அந்த நிறுவனத்தில் அதிக வருவாயைக் காணலாம்.

நீங்கள் சிறந்த நிதி நிலையை அடைவீர்கள். சர்வதேச பயணத்திற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ராணுவம், விமானப்படை அல்லது காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பித்து, அவற்றில் சேர விரும்பினால் இந்த ஆண்டு வெற்றிபெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

உங்கள் தாயிடமிருந்து அதிக அன்பைப் பெறுவீர்கள். மேலும் அவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உங்கள் தந்தையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவரைத் தனிக்கவனத்துடன் கவனிக்க முயற்சியுங்கள்.

நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவராக இருந்தால், சொத்து தொடர்பான சில ஆவணங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மாமியார் உங்களுக்கு நிறைய மதிப்புமிக்க விஷயங்களைக் கற்றுக் கொடுப்பார். எந்தவொரு குறிப்பிடத்தக்க விஷயத்திலும் உங்களுக்கு பெரும் உதவியாக இருப்பார்கள். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வது அவசியம்.

இதையும் படிங்க: மிதுனம் ராசிக்கு புத்தாண்டு பலன் 2024; தேர்ந்தெடுக்கும் அனைத்து துறையிலும் வெற்றிதான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.