ETV Bharat / state

நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் - பாஜக

author img

By

Published : Dec 25, 2021, 7:58 PM IST

நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா
செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா

சென்னை: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் தினத்தை, தமிழ்நாட்டில் பாஜகவினர் நல்லாட்சி தினமாக கொண்டாடுகின்றனர். இதனால் நங்கநல்லூர் மண்டலத்தில் வாஜ்பாயின் புகைப்படம் வைத்து மலரஞ்சலி செலுத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மூன்றாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது உலகம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சந்திக்க தயார்

இந்தியாவில் முதல் அலை பரவலின் போது மக்கள் பிரதமரின் அறிவுறுத்தலைக் கடைபிடித்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. தற்போதும் அதே போல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆதார் கார்டை, வாக்காளர் அட்டையுடன் இணைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எதனால் முதலமைச்சர் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் அதனை பெரிதுபடுத்துகின்றனர்.

ஆதார் கார்டுடன், வாக்காளர் அட்டையை இணைக்க யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரோ, அந்த கட்சியை எல்லாம் மக்கள் தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். அவர்களெல்லாம் ஆள தகுதி இல்லாதவர்கள், தேசப் பற்றில்லாதவர்கள். இவர்களை மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா

நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க பாஜகவினர் தயாராக உள்ளனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு, உடை போன்றவற்றை வழங்கும் பல்வேறு நலத்திட்ட பணிகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.

வன்முறை என்பது இரு முறை கத்தி

மேலும் அவரிடத்தில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினரை, திமுகவினர் தாக்கியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “வன்முறை என்பது இரு முறை கத்தி. அதனை யாருக்கு எதிராக பயன்படுத்தினாலும் மற்றொரு இடத்தில் நமக்கு எதிராக திரும்பும். திமுகவினர் அராஜகங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Sexual harassment: பழனியில் பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.