ETV Bharat / state

B.Ed application: பி.எட் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 10:21 PM IST

பி.எட் (B.Ed) படிப்பில் சேர்வதற்கு செப்டம்பர் 1 முதல் 11 வரை மாணவர்கள் ஆன்லைனில் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

b.ed
பி.எட் படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரியில் 900 இடங்களும், அரசு உதவிபெறும் 14 கல்லூரிகளில் 1,140 இடங்களும் என 2,040 இடங்களில் பி.எட் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு செப்டம்பர் 1 முதல் 11 வரை ஆன்லைன் மூலம் https://www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்) முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் கட்டணமாக 250 செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும், கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் https://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பகட்டணம்: விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் கல்லூரி உதவி சேர்க்கை மையங்களில் "The Director, Directorate of collegiate education, chennai-15" என்ற பெயரில் செப்டம்பர் 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும், நேரடியாகவும் கட்டணத்தை செலுத்தலாம். மேலும், விபரங்களை பெறுவதற்கு 93634 62070, 93634 62007, 93634 62042, 93634 62024 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனவும் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு 5,139 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'I.N.D.I.A' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் மு.க.ஸ்டாலின்.. மும்பையில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.