ETV Bharat / state

Video Leak - சைவக்கடையில் சிக்கன் ரைஸ் கேட்டு போதையில் தகராறு செய்த காவலர்கள்!

author img

By

Published : Feb 17, 2023, 9:02 PM IST

தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்குச் சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்கள் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat சிக்கன் பிரைடு ரைஸ் கேட்டு தகராறு செய்த காவலர்கள்
Etv Bharat சிக்கன் பிரைடு ரைஸ் கேட்டு தகராறு செய்த காவலர்கள்

Video Leak - சைவக்கடையில் சிக்கன் ரைஸ் கேட்டு போதையில் தகராறு செய்த காவலர்கள்!

சென்னை: தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா பவன் உணவகத்தில் நேற்றிரவு (பிப்.16) தாம்பரம் ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் இரண்டு பேர் மஃப்டியில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது. சைவ உணவகத்திற்குள் சென்ற அவர்கள், தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம், இங்கு அசைவம் கிடையாது எனக் கூறியுள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு பிரைட் ரைஸ் வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், ஆயுதப்படை காவல் துறையினருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில், இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இச்சம்பவம் தொடர்பாக தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவல் துறையினரிடம் சேலையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் மோகம்.. தாய் கழுத்தை நெரித்து கொலை.. போலீசாரிடம் தற்கொலையென புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.