ETV Bharat / state

எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

author img

By

Published : Feb 17, 2023, 10:23 PM IST

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய எஸ்எஸ்சி இணையதளம் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தும் எஸ்எஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக இன்று (பிப்.17ஆம் தேதி) வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடியும் தருவாயில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியதால் தேர்வர்கள் அவதியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று (பிப்.16ஆம் தேதி) எஸ்எஸ்சி இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் இயக்குநருக்கு எஸ்எஸ்சி தேர்வுக்கு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த கடிதத்தில், ''எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தருவாயில் இப்படி தொழில் நுட்பக் கோளாறு குறுக்கிட்டுள்ளதால் நேர இழப்பை ஈடு செய்யும் வகையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

  • நன்றி!

    SSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது .

    இணையதளம் சரிசெய்யப்பட்டு ஒருவாரம் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மாணவர்கள் பயன்படுத்திக் கொள்க ! pic.twitter.com/uxP8bszUoG

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பலனளிக்கும் விதமாக மத்திய அரசு எஸ்எஸ்சி தேர்வுக்கு வின்ணப்பிக்க கால அவகாசத்தை வரும் பிப்.24ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவி வேறு விதத்தில் வலியுறுத்துகிறார் - சு.வெங்கடேசன் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.