ETV Bharat / state

பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Feb 13, 2022, 10:33 PM IST

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு இன்று (பிப்ரவரி 13) பரப்புரையாற்றினார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/13-February-2022/14457370_pmkk.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/13-February-2022/14457370_pmkk.jpg

சென்னை: சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.

அப்போது சென்னை மாநகராட்சி, பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டு தேர்தல் பரப்புரை தொடங்கிவைக்கப்பட்டது.

தனிப்பட்ட பேருந்து போக்குவரத்து முறை

அதில், “சென்னையின் முக்கிய அம்சங்களைப் பொறுத்தவரை பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் (BRT), சென்னையில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் (Bus Rapid Transit – BRT) என்னும் தனிப்பட்ட பேருந்து போக்குவரத்து முறையைச் செயல்படுத்த வேண்டும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி ராமதாஸ்

சென்னைப் பெருநகரின் மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து நிலையங்கள், நடைபாதைகள், மிதிவண்டி வசதிகள் இணைந்த ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, முழுமையடையாமல் உள்ள எம்ஆர்டிஎஸ் (MRTS) கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தின் கடைசிகட்ட 'ஆதம்பாக்கம் - பரங்கிமலை' இணைப்பை விரைவாக அமைக்க வேண்டும்.

மின்சார வாகனங்கள், குப்பை மேலாண்மை, குப்பை எரிப்பு, நெகிழி ஒழிப்பு தூய காற்று செயல்திட்டம், காற்று மாசு கண்காணிப்பு, வாகன பராமரிப்பு, அனல்மின் மாசு, நீர்வளம், சாலைப் பாதுகாப்பு, பள்ளிக்கு பாதுகாப்பான பயணம், மக்களாட்சி உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

துணையமைப்புக் கொள்கை கோட்பாடு

மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை சென்னை பெருநகரில் அதிவேக மின்னேற்றக் கட்டமைப்புகளை (Superfast Electric Vehicle Charging Stations) உடனடியாகப் பரந்துபட்ட அளவில் அமைக்க வேண்டும். பூஜ்ஜியக் குப்பை (Zero Waste) கோட்பாட்டைச் செயல்படுத்த வேண்டும்.

இந்திய அரசின் 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளை (Municipal Solid Wastes Rules) முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். மேலும் சென்னைப் பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை (Clean Air Action Plan) செயல்படுத்த வேண்டும். சென்னைப் பெருநகரின் காற்று மாசுபாட்டை உடனுக்குடன் கண்காணிக்கும் கருவிகளின் எண்ணிக்கையை 40ஆக அதிகரிக்க வேண்டும்.

மக்களாட்சியைப் பொறுத்தவரை அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் சிறிய அரசாங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற துணையமைப்புக் கொள்கை (Principle of Subsidiarity) கோட்பாட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

நகர்ப்புற அரசுகளை அரசு அலுவலர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் 12ஆவது அட்டவணையில் உள்ள அதிகாரங்கள் முழுமையாக நகர அரசுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அவற்றுக்கான நிதி ஆதாரங்களும் அளிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவுக்காக உழைத்தோருக்கு நாமம்; அதிமுகவிலிருந்து சென்றோருக்கு அமைச்சர் பதவி - எடப்பாடி கலகல

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.