ETV Bharat / state

சென்னையில் கன மழை - விமான சேவை பாதிப்பு

author img

By

Published : Jun 20, 2022, 12:48 PM IST

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

திடீர் கன மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு
திடீர் கன மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு

சென்னை : ஜொ்மன்,தோகா,துபாய்,மும்பையில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத்,பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மலேசியா, தாய்லாந்து, டில்லி, ஹைதராபாத், வாரணாசி, மங்களூா், திருச்சி உட்பட 12 விமானங்கள் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. அதேபோல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 சா்வதேச விமானங்கள் உட்பட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் திடீா் மழை,சூறைக்காற்று காரணமாக 31 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இரவு 11.50 மணிக்கு 286 பயணிகளுடன் ஜொ்மன் நாட்டின் பிராங்க்பாா்ட் நகரிலிருந்து லுப்தான்ஷா ஏா்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தது.மழை சூறைக்காற்று காரணமாக தரையிறங்க முடியாமல் ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் மழை, இடி மின்னல்,சூறைக்காற்று ஓரளவு ஓய்ந்தது. அதன்பின்பு வந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின. இதையடுத்து இன்று அதிகாலை மீண்டும் பலத்தமழை,சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அதிகாலை 2.10 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த ஏா்இந்தியா விமானம் பெங்களூருவுக்கும், அதிகாலை 2.20 மணிக்கு தோகாவிலிருந்து வந்த கத்தாா் ஏா்லைன்ஸ் விமானம் ஹைதராபாத்திற்கும், அதிகாலை 2.40 மணிக்கு துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம்,பெங்களூருக்கும் திருப்பி அனுப்பப்பட்டன.

இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், துபாய், பக்ரைன், தோகா, உட்பட சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், புனே, உட்பட 6 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 15 புறப்பாடு விமானங்கள், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதையும் படிங்க: விமானம் நடுவானில் பறந்தபோது பெண் பயணியிடம் டாக்டர் சில்மிஷம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.