ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை

author img

By

Published : Feb 15, 2023, 8:56 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை
ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணைஇடைத்தேர்தல் வழக்கு நாளை விசாரணை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுகவின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு நாளை (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவரது மனுவில், தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம்பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை என்பதும், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பதும், பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்களில், 7 ஆயிரத்து 947 இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், 30 ஆயிரத்து 56 வாக்காளர்கள் தொகுதியில் வசிக்கவில்லை என்றும் இவர்கள் கள்ள ஓட்டு போட பயன்படுத்தக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆளுங்கட்சியில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரின் பணபட்டுவாடா பற்றி வீடியோ வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்தியாசம் என்பது 8 ஆயிரத்து 500 வாக்குகள் தான் எனவும், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் நீடிக்கிறது.

ஆகவே, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரியும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால் மத்திய படைகளை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பல தேதிகளில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பூத் லிப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வில் நாளை (பிப்ரவரி 16) விசாரணைக்கு வரவுள்ளது

இதையும் படிங்க: சென்னையில் நாளை, நாளை மறுநாள் மின்தடை... எந்தெந்த பகுதிகளுக்கு பவர்கட் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.