ETV Bharat / state

சென்னை - கோலாலம்பூர் இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்! பயணிகள் மகிழ்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 11:40 AM IST

Additional daily flight between Chennai Malaysia to start: சென்னை - கோலாலம்பூர் - சென்னை இடையே கூடுதலாக தினசரி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம்
பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம்

சென்னை: மலேசியா நாட்டுக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, இதுவரையில் தினமும் 5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள், 2 ஏர் ஏசியா விமானங்கள், 1 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என மொத்தமாக, இந்த 5 விமானங்களும் தினமும் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கும் 10 விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகின்றன.

மலேசியா நாடு சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.

ஆனால் சென்னையில் இருந்து தினமும் 5 விமானங்கள் மட்டுமே மலேசிய நாட்டிற்கு இயக்கப்படுவதால் சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கு, விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை - கோலாலம்பூர் - சென்னை இடையே தினசரி விமான சேவையில் புதிதாக, பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: ரயிலில் நெய் கொண்டு செல்ல தடையா? - என்னென்ன பொருட்களை ரயில் பயணத்தில் கொண்டு செல்லலாம்?

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மாலை புறப்படும் இந்த விமானம், இரவு 10:25 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்து சேரும். அதன் பின்பு இந்த விமானம் மீண்டும் இரவு, 11:15 மணிக்கு சென்னையில் இருந்து, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும்.

இந்த புதிய விமான சேவை கடந்த வியாழன் (ஆகஸ்ட் 24) முதல் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மலேசிய நாட்டிற்கு இதுவரை தினமும் 5 விமானங்கள், 10 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் 6 விமானங்கள், 12 விமான சேவைகளாக இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பதால், ஒரே நேரத்தில் 189 பயணிகள் வரை கையாளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை - கோலாலம்பூர் - சென்னை இடையே, கூடுதலாக, 1 விமானம் என 2 புதிய விமான சேவைகளை தொடங்கி உள்ளது விமான பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Metro rail: நெல்லையில் மெட்ரோ ரயில் கனவு கானல் நீரானது- சேலம் மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.