ETV Bharat / state

"உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான் ஒன்று அண்ணாமலை; மற்றொன்று மோடி" - நடிகர் மன்சூர் அலிகான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 7:56 PM IST

Mansoor Alikhan: லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தொடர்ந்து தேர்தலில் நிற்க போவதாகவும் அறிவித்தார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி
நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

சென்னை: லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியா முழுவதும் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் எந்தெந்த பிரிவுகளில் மக்கள் இருக்கிறார்களோ, விகிதாசாரப்படி பகிர்ந்து அளிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட இந்தியா உருவாக வேண்டும் என்றால், இது தலையாய கோரிக்கை செயல்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்: தமிழ்நாட்டுக்கு முன்பே பீஹாரில் இதை நிறைவேற்றி உள்ளார்கள. 300 கோடி இருந்தால் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக வைத்து 1.5 மாதத்தில், தமிழ்நாட்டில் இதை நிறைவேற்றலாம். இதை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்று பல விஷயங்கள் நடக்கிறது. ஏன் இப்படி செய்கிறார்கள்?.

ஐபிஎஸ் படித்த அண்ணாமலை அரசியலுக்கு வந்திருக்கிறார். எதற்காக குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும். மோடி வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக சொன்னார். எவ்வளவு பேருக்கு தற்போது வேலை கிடைத்தது, எங்கே கிடைத்தது?. வட இந்திய தொழிலாளர்களுக்கு நாம் தான் இங்கு வேலை கொடுக்கிறோம். அடுத்து வரும் தேர்தலில் மக்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கே போட்டியிட இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மதவெறி காடாக மாற்றும் பாஜக: தொடர்ந்து, தமிழகத்தை மதவெறி காடாக மாற்ற பார்க்கிறார்கள் என்று யாரை சொல்கிறார்கள், பாஜகவில் மட்டும் தான் ரவுடிகள் இருக்கிறார்களா மற்ற கட்சியில் இல்லையா என்ற செய்தியாளரின் கேள்விகளுக்கு, "பாஜக அரசு தான் செய்கிறது. எல்லாக் கட்சிகளிலும் இருக்காங்க. மோடியை ஏழை தாயின் மகன் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரது உடை, கண்ணாடி என எல்லாமே ரொம்ப காஸ்ட்லியாக அணிகிறார்.

அதானி என்பவர் யார்?. எதற்காக அனைத்தையும் கார்ப்பரேட்-டிடம் ஒப்படைக்கிறீர்கள். ஏர்போர்ட், கப்பல் என எல்லாமே அதானியிடமே உள்ளது. இதே அதானி, வெளிநாட்டில் இருந்து பல வளங்களை சட்டவிரோதமாக கொண்டு வரலாமே. எதற்காக தனியாரிடம் தூக்கி கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டிய அமைச்சர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகின்றது. அமலாக்க துறை எல்லா மாநிலங்களிலும் இதை மட்டும்தான் செய்கிறது.

எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி. தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு. ஆனால் இதை நான் எதிர்க்கிறேன். சரக்கு படத்தை எடுத்தேன். சென்சாரில் அம்பானி, அதானி போன்ற பெயர்கள் இருக்க கூடாதாம். நிறைய கட் சொல்கிறார்கள். படத்தை எடுக்க முடியாமல் தவிக்கிறேன். சுத்திகரிக்கப்பட்ட இந்தியா உருவாக வேண்டும். அதற்கு சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தான் முக்கியம்.

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு சிறைவாசிகளை விடுதலை செய்திருக்க வேண்டும். நீட்டையும் ரத்து செய்திருக்க வேண்டும். மத்தியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணிக்கு நான் எனது ஆதரவை தருவேன்" என அவரது குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை முன்பு நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு: தொடர்ந்து ஆளுநர் மாளிகை மற்றும் கோயில்கள் முன்பு குண்டு வீச்சுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இது போன்ற விசயங்கள் பொதுவாக இப்போது அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. ஆளுநர் தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்து வருகிறார். இதை தவறான ஒன்றாக நான் பார்க்கிறேன். அதைப்போல சென்னையில் 650 ஏக்கர் அளவில் பெரிய கட்டிடமாக ராஜ் பவன் இருக்கிறது. மத்திய அரசை வேண்டிக்கொள்கிறேன். ராஜ் பவனுக்கு பல்வேறு முக்கியஸ்தர்கள் வருவார்கள். அதனால் பெரிதாக இருக்க வேண்டும் தான். ஆனால் இவ்வளவு ஏக்கர் தேவை இல்லை. அதற்கு பதிலாக மக்களுக்கு பயன்படும் வகையிலாக அந்த இடங்களை பயன்படுத்தலாம்" என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

அரசியலில் அண்ணாமலையின் செயல்: தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து அவர்களே சொல்லிட்டாங்க. பாஜக தனியாக நின்று வெற்றி பெறட்டும். அதற்கு முன்னதாகவே என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வளவு பெரிய படிப்பு படித்து விட்டு அண்ணாமலை ஏன் இப்படி கட்சியில் சேர்ந்து என்னவோ பண்ணுகிறார்? அவர் ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். லியோ படப்பிடிப்பில் நான் தெளிவாக சொன்னேன். சிகரெட்டை என்னிடம் இருந்து வாங்கி சும்மா வாயில் வைத்து நடிப்பார். ஆனால் அதை எல்லாரும் அப்படி,இப்படி என்று பேசுகிறார்கள். இப்படியாக பேசுபவர்கள் சிகரெட் மது ஆலைகளை மூடட்டுமே..?

ஜிஎஸ்டி பிரித்தது குறித்து பாஜக எல்லாவற்றிலும் ஓர வஞ்சனை செய்கிறார்கள். புதிய பாராளுமன்றத்துக்கு தற்போது என்ன தேவை? பெரியார் சிலை அகற்றம் குறித்து அப்படி எளிதாக செய்து விட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல திட்டங்களை மக்களுக்கு ஆதரவாக செய்வதாக சொன்னார்கள். ஆனால் தற்போது அப்படி எதுவும் செய்யவில்லை. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும். விலைவாசி உயர்வை குறைப்பது உள்ளிட்ட பலவற்றை செய்திருக்க வேண்டும்.

உதயநிதியின் சனாதன கருத்து: சனாதானத்தை பற்றி உதயநிதி சொன்னது வேறு. அவர் இந்து மதத்துக்கு எதிராக சொல்லவில்லை. ஆண்டாண்டு காலமாக இருப்பதை தான் சொன்னார். ஆனால் பெரியாரின் உண்மையான சமூக நீதியை வட இந்தியா முழுவதும் சேர்க்காமல் இருப்பது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். இது இந்து மத ஒழிப்பு கிடையாது. உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை முதல்வரிடம் மனுவாக கொடுக்க இருக்கிறோம். அதன்படி வேலைவாய்ப்பு கொடுங்கள். நான் நடிகனே இல்லை. உலகத்தில் இரண்டு நடிகர்கள் தான், ஒன்று அண்ணாமலை மற்றொன்று மோடி" என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

அரசியலில் விஜய்-யின் நாட்டம்: இதையடுத்து, விஜயின் அரசியல் குறித்து பேசிய மன்சூர் அலிகான், "விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும். பிறகு எனது ஆதரவை தருவது பற்றி பேசலாம். எந்த நேரத்தில் போட்டியிடுவாரு என்று அவருக்கு தெரியும். அப்போது தேர்தலில் போட்டியிடுவார். எல்லாரும் ஒன்றாக இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும். அரசியலில் எந்த இயக்கம் என்னை வரவேற்குதோ, அந்த இயக்கத்தில் நின்று தேர்தலில் போட்டியிடுவேன்" என்று சொல்லி ரகுபதி ராகவ ராஜா ராம் பாடலுடன் நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா இணைந்து தயாரிக்க உள்ள ஐசிவி போர் வாகனங்கள் பற்றி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.