ETV Bharat / state

அதிவேகமாக மாநகரப்பேருந்தை இயக்கியதால் விபத்து: ஓட்டுநர், நடத்துநர் காவல் நிலையத்தில் சரண்

author img

By

Published : Aug 7, 2022, 7:28 PM IST

Updated : Aug 7, 2022, 10:35 PM IST

ஆலந்தூர் கத்திப்பாராவில் அதிவேகமாக மாநகர பேருந்தை இயக்கி வழிகாட்டும் பெயர்ப்பலகை தூண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநர், நடத்துநர் பரங்கிமலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

ஓட்டுநர், நடத்துனர் காவல் நிலையத்தில் சரண்
ஓட்டுநர், நடத்துனர் காவல் நிலையத்தில் சரண்

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து சென்றுகொண்டு இருந்தது. அப்போது பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு வளைவில் பேருந்து அதிவேகமாக வந்ததால் கட்டுப்பட்டை இழந்து வளைவுப்பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர்ப்பலகையான ராட்சத தூண் மீது மோதியது.

இதில் ராட்சத தூண் உடைந்து சாலையின் இருபக்கமும் விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் மீதும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற வேன் மீதும் விழுந்தது. பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்ததில் பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரத்தை (30) ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மற்றொரு இளைஞரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மேலும் லேசான காயம் அடைந்த 3 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

சாலையின் இருபக்கமும் பெயர்ப்பலகை தூண் விழுந்ததால் கிண்டியில் இருந்து கத்திப்பாரா வரையிலும் கத்திப்பாராவில் இருந்து பழைய மீனம்பாக்கம் வரையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த பெயர்ப்பலகை ராட்சத தூணை அகற்றினார்கள். பின்னர் மாநகரப்போக்குவரத்துக்கழக வாகன மீட்பு வண்டி முலம் விபத்து ஏற்படுத்திய மாநகரப்பேருந்தை அப்புறப்படுத்தினர்.

பின்னர் ஒன்றரை மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இது பற்றி பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்தியதும் அங்கிருந்த பொது மக்கள் வாக்குவாதம் செய்ததால் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அங்கிருந்து நைஸாக தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநர் ரகுநாதன் மற்றும் நடத்துநர் இருவரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

Last Updated : Aug 7, 2022, 10:35 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.