ETV Bharat / state

கைப்பந்து விளையாட சென்று உயிரிழந்த வீரரின் உடல் விமானம் மூலம் தாயகம் வருகை

author img

By

Published : Dec 29, 2022, 11:00 PM IST

Updated : Dec 29, 2022, 11:08 PM IST

நேபாள நாட்டிற்கு கைப்பந்து விளையாடச் சென்ற தமிழ்நாட்டு உடற்கல்வி ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதன்பின் அவரது உடல், விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டது.

நேபால் நாட்டிற்கு கைப்பந்து விளையாட சென்ற வீரர் உயிரிழப்பு
நேபால் நாட்டிற்கு கைப்பந்து விளையாட சென்ற வீரர் உயிரிழப்பு

கைப்பந்து விளையாட சென்று உயிரிழந்த வீரரின் உடல் விமானம் மூலம் தாயகம் வருகை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் ஊராட்சியை சேர்ந்த நேருதாசன் என்பவரது மகன் ஆகாஷ்(27), இவர் அம்பத்தூரில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 21ம் தேதி கைப்பந்து விளையாட நேபாள நாட்டிற்கு சென்று விளையாடி உள்ளார்.

முதல் போட்டியில் விளையாடிய பின்னர் ஓய்வு அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் முயற்சியால் இன்று ஆகாஷின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், இறந்தவரின் உறவினர்கள் வந்திருந்தனர். அவரது உடல் மீது வாலிபால் மற்றும்அவர் ஏற்கனவே போட்டிகளில் வெற்றி பெற்று வாங்கிய கோப்பைகளை வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேபாளில் ஆகாஷ் உயிரிழந்த தகவல் கிடைத்த உடன் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து உடலை குடும்பத்துடன் ஒப்படைக்கும் நடவடிக்கையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மேற்கொண்டார்.துறை சார்பில் இதுவரை 288 உடல்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை விமானநிலையம் வந்த நாடளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நேபாள நாட்டில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ஆகாஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தது அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரின் உடல் நேபாளத்தில் இருந்து தற்போது தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உள்ளோம்.

தமிழ்நாட்டு அரசு ஆகாஷின் குடும்பத்திற்கு இழப்பீடு அல்லது அரசு வேலை வாய்ப்பு தர முன்வர வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன் இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் பிரபல தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்; உரிமம் இல்லாததால் நடவடிக்கை

Last Updated : Dec 29, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.