ETV Bharat / state

மதுரை மீனாட்சி கோயிலில் நவீன தங்கும் விடுதி - அமைச்சர் சேகர் பாபு

author img

By

Published : Apr 18, 2022, 5:43 PM IST

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 35 கோடி ரூபாய் செலவில், நவீன தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நவீன தங்கும் விடுதி கட்ட அரசு முன் வருமா என சட்டப்பேரவை உறுப்பினர் தளபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, 'கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டு, 1.33 ஏக்கர் பரப்பளவில் 57 அறைகளில் 307 படுக்கை வசதிகளுடன் 35 கோடி ரூபாய் செலவில் தங்கும் விடுதி கட்டத்திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது' எனக் கூறினார்.

மேலும், இந்தாண்டே தங்கும் விடுதி கட்டித்தரப்படும் எனக் கூறிய அவர், '307 படுக்கை வசதிகளுடன், வைஃபை (wifi) வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தங்கும் விடுதி அமைக்கப்படும்' எனவும் தெரிவித்தார்.

அதேபோல், 'ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயிலில் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 54 அறை கொண்டு, 136 படுக்கை வசதிகள் கொண்ட நவீன தங்கும் விடுதி அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின், சபரீசன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.