ETV Bharat / state

ஜி-20 மாநாட்டின் முன் ஏற்பாடுகள் தொடர்பான கூட்டம்: தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை

author img

By

Published : Jul 5, 2023, 1:13 PM IST

ஜி-20 மாநாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஜி-20 மாநாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் சென்னையில் வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளதை ஒட்டி, இதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக ஜி-20 விளங்கி வருகிறது. அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்னைகளிலும், உலகளாவிய கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வடிவமைப்பதிலும், வலுப்படுத்துவதிலும் ஜி-20 முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் கடந்த டிசம்பர் 1, 2022 முதல் வரும் நவம்பர் 30, 2023 வரை நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமையில் ஜி-20-ல் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான புதிய பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிக்குழுவின் மூன்று கூட்டங்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நகரங்களில் நடத்திட திட்டமிடப்பட்டு, அவற்றில் இரண்டு கூட்டங்கள் காந்திநகர் மற்றும் மும்பையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

மூன்றாவது கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. ஜி-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டம் 24.7.2023 முதல் 26.7.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளதை ஒட்டி, இதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 05) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள், "கூட்டத்திற்கு வருகை தந்த தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலர்கள் அனைவரையும் வரவேற்று, தமிழ்நாட்டில் 24.7.2023 முதல் 26.7.2023 வரை நடைபெற உள்ள பேரிடர் அபாயக் குறைப்பு குறித்தான உறுப்பு நாடுகளின் கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட அனைத்து முன் ஏற்பாட்டு பணிகளையும் தொடர்புடைய துறைகள் மேற்கொள்ளுமாறு துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்."

மேலும், இந்த கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், உறுப்பினர், ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் மிர்நாளினி ஸ்ரீவாஸ்த்தவா, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணைச் செயலாளர் (தணிப்பு) கலோனல் கீர்த்தி பிரதாப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடலைனா என்ன? அதுவா முக்கியம் - ஈபிஎஸ் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.