ETV Bharat / state

6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 9:29 PM IST

6thstd to 12thstd Half Yearly Exam Time Table Released: 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டின் அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.

DPI
DPI

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.

இது குறித்து பள்ளிகல்வி துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. அதேபோல் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பு குழு சார்பில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் இரண்டு விதமான கேள்வித் தாள்களை இந்த குழுவானது தயாரிக்கும்.

மேலும் இம்முறை மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித் தாள்காளக இருக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வசதிகளும் செய்யபட்டுள்ளன.

6 முதல் 10 ஆம் வகுப்பு:

நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.

இதற்கான கால அட்டவணை:

11-ஆம் தேதி அன்று தமிழ்,(மொழிப்பாடம்)

12-ஆம் தேதி அன்று விருப்பட்ட மொழி பாடம்

13-ஆம் தேதி அன்று ஆங்கிலம்

15-ஆம் தேதி அன்று அறிவியல்

18-ஆம் தேதி அன்று கணிதம்

20-ஆம் தேதி அன்று சமூக அறிவியல்

21-ஆம் தேதி அன்று உடற்கல்வி என 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை நடைபெறுகிறது.

இதில் 6ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 9, 10 வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வானது நடைபெறவுள்ளது.

இதேப்போல் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கிறது.

7ஆம் தேதி அன்று மொழி பாடம்

8 ஆம் தேதி அன்று ஆங்கிலம்,

11ஆம் தேதி அன்று கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங் (பொது).

13ஆம் தேதி அன்று ஆங்கில தொடர்புடையல், இந்திய கலச்சாரம் மற்றும் கொள்கைகள், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்படுத்தபட்ட மொழிப்பாடம் (தமிழ்), மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மிண்ணணு பொறியியல்.

16ஆம் தேதி அன்று இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள்

19ஆம் அன்று வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்

22ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு பொறியியல் , அடிப்படை கட்டுமான பொறியியல், அடிப்படை வாகன பொறியியல், அடிப்படை இயந்திர பொறியியல், துணிநூல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகதண்மை ஆகியவை ஆகும்.

மேலும் 12-வகுப்புக்கு காலை 09.30 மணியில் இருந்து மதியம் 12.45 வரையிலும், இதில் காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்கவும், 09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளை பூர்த்தி செய்யவும், அதன் பிறகு 09.45 மணியில் இருந்து மதியம் 12.45 வரை தேர்வானது நடைபெறும்.

இதேப்போல் 11ஆம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும். இதில் 1.15 முதல் 1.30 வரை வினாத் தாள்களை படிக்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.