நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
Actor Vijayakanth Admit in Chennai Miot hospital : நடிகர் விஜயகாந்த் உடல் நலப் பிரச்சினை காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தேமுதிக நிறுவனரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான நடிகர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று இரவு வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! #etvbharat #etvbharattamil #vijayakanth #actorVijayakanth pic.twitter.com/pAeUuBnCw1
— ETVBharat Tamilnadu (@ETVBharatTN) November 18, 2023
இதையும் படிங்க : எதற்காக நடிகர் ரஜினியின் பேரனுக்கு அபராதம்! முழுத் தகவல்!

Loading...