ETV Bharat / state

TRB BEO Notification: வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்... B.Ed., பட்டதாரிகள் தயாரா?

author img

By

Published : Jun 5, 2023, 6:59 PM IST

33 வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்வதற்கான தேர்வுகள் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் எனவும், அந்தப் பணியிடத்திற்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டாரகக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம்.

வட்டாரக்கல்வி அலுவலர் பணியில் 33 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான ஒஎம்ஆர் ஷீட் ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசின் விதிமுறைகளின் படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது சலுகை அளிக்கப்படுகிறது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு தகுதியாக பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், பிஎட் பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும். மாநிலத்தின் மாெழியான தமிழ் மொழியில் போதுமான அளவிற்கு அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி கட்டாயம் தமிழ் பாடத் தேர்வில் தகுதி பெற வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது செயல்பாட்டில் உள்ள இமெயில் ஐடி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக 600 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 300 ரூபாய் செலுத்தினால் போதுமானது.

தமிழ் மொழித்தேர்வு கட்டாயம் : தமிழ் மொழிப்பாடத்தில் 10ஆம் வகுப்பு நிலையில் 30 கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளுக்கு 30 நிமிடத்தில் விடை எழுத வேண்டும். 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். 40 சதவீதம் மதிப்பெண்கள் பெறப்பட வேண்டும். 20 மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவர். ஒஎம்ஆர் முறையில் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

கட்டாயம் தமிழ் தேர்வில் தகுதிப் பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறும். தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போர்கால அடிப்படையில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.