ETV Bharat / state

வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Oct 20, 2021, 4:19 PM IST

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
rain
rain

சென்னை: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, "வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் (அக்.20,21) இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்

22.10.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

சோழவந்தான் (மதுரை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, ஏற்காடு (சேலம்), பெலாந்துறை (கடலூர்), தழுத்தலை (பெரம்பலூர்), தஞ்சை பாபநாசம் தலா 4, வத்திராயிருப்பு (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), விழுப்புரம், சிங்கோனா (கோவை) தலா 3, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), திண்டிவனம் (விழுப்புரம்), கூடலூர் பஜார் (நீலகிரி), வீரகனூர் (சேலம்), எடப்பாடி (சேலம்), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2, பேரையூர் (மதுரை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கடலூர் (கடலூர்), சென்னை விமான நிலையம், பாலக்கோடு (தர்மபுரி), விருதாச்சலம் (கடலூர்), வீரபாண்டி (தேனி), கள்ளக்குறிச்சி, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), சின்னக்கல்லார் (கோவை) தலா 1.

வடகிழக்கு பருவமழை

வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது". என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.