ETV Bharat / state

TET-2013 ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! காவல் துறை வைத்த செக்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 7:09 AM IST

2013 TET passed teachers hunger strike: சென்னை DPI வளாகத்தில் 27ஆம் தேதி அன்று மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் நடைபெற உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

2013 TET passed teachers hunger strike
TET-2013 ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுப்பு

சென்னை: வரும் 27ஆம் தேதி சென்னை பள்ளிக் கல்வித்துறை இயக்குநரக (DPI-Directorate of Public Instruction Campus) கட்டிட வளாகத்தில் மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கம் சார்பில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தெருவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய இடமான DPI கட்டிட வளாகம், போராட்டம் நடத்த ஏற்ற இடம் அல்ல என அனுமதி கோரிய மனுதாரருக்கு காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், "மனுதாரர் கபிலன் சின்னசாமி குறிப்பிட்ட DPI கட்டிட வளாகத்தில் கல்வி ஆணையாளர் அலுவலகம், தொடக்கக்கல்வித் துறை, அரசு தேர்வுகள் துறை, ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆசிரியர்கள் தேர்வு வளாகம், முறைசாரா வயது வந்தோர் கல்வி நிறுவனம், பெற்றோர் ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், மாதிரி பள்ளி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, உடற்கல்வி முதன்மை அலுவலகம், கல்வி தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், இந்த வளாகத்தில் சுமார் 1000 அரசு அலுவலர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாது, வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு நியாய விலை கடை, தபால் அலுவலகம், மின்சாரத்துறை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதன் காரணமாக நாள்தோறும் இங்கு அதிக அளவில் பொது மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆகவே பொதுமக்கள் நலன் கருதியும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி பேணிகாக்க வேண்டியதன் அவசியத்தினாலும் வரும் 27 ஆம் தேதி அன்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட DPI வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது" என காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மகளிருக்கு 33% சிறப்பு; திருநங்கைகளுக்கு 2% இடஒதுக்கீடு எப்போது? - திருநங்கை பத்மினி அரசுக்கு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.