ETV Bharat / state

பூந்தமல்லியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை!

author img

By

Published : Dec 22, 2020, 11:48 AM IST

சென்னை: பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூந்தமல்லி நகைக் கொள்ளை  சென்னையில் பூட்டிய வீட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை  சென்னை நகை கொள்ளை வழக்குகள்  சென்னை மாவட்டச் குற்றச் செய்திகள்  தமிழ்நாடு தற்போதைய செய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்  Poonamallee jewelery robbery  20 shavern robbers break into locked house in Chennai  Chennai jewelery robbery cases  Chennai Crime News  Tamil Nadu Current News  Tamil Nadu Crime News
Chennai jewelery robbery cases

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் ராஜேஸ்வரி தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (40). இவர், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், நேற்று காலை (டிச.21) திருநாவுக்கரசு வீட்டை பூட்டிவிட்டு கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நகைக் கொள்ளை

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்கள், தங்களை காவல் துறையினர் பிடிக்காமல் இருக்க வீட்டிற்குள் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஹைதராபாத் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் திருவள்ளூரில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.