ETV Bharat / state

மாமூல் கேட்டு தர மறுத்த மளிகைக் கடை உரிமையாளரின் மகன் கடத்தல் - 2 பேர் அதிரடி கைது

author img

By

Published : Jul 21, 2022, 9:40 PM IST

பல்லாவரம் அருகில் மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகனை கடத்திச் சென்று நகையை பறித்துச் சென்ற சம்பவதில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கடத்தலில்- 2 பேர் கைது
மாமூல் கேட்டு தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கடத்தலில்- 2 பேர் கைது

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச்சேர்ந்த சசிகுமார்(52). அனகாபுத்தூர் பஜார் சாலையில் மளிகைக் கடை நடத்தி வறுகிறார். இவருக்கு உதவியாக இவரது மகன் யோகேஸ்வரனும் கடையில் இருந்து வரும் நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கடைக்குச்சென்ற இரண்டு நபர்கள், 'இனி தங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்' என மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர், அதற்குப் பணம் தர மறுத்துள்ள யோகேஸ்வரனை கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் யோகேஸ்வரன் வீட்டுக்குத் திரும்பியபோது வழியில் நான்கு பேர் கொண்ட கும்பல் யோகேஸ்வரனை வழிமறித்து, கத்தி முனையில் கடத்திச்சென்று பொழிச்சலூரில் உள்ள பாழடைந்த வீட்டில் வைத்து, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து, இரவு முழுவதும் கத்தியின் பின் பக்கத்தால் தாக்கியுள்ளனர்.

அதன்பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்சங்கிலி; 1 சவரன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அங்கிருந்த நான்கு பேரும் கஞ்சா போதையில் தூங்கிவிட்டதால் நேற்று காலையில் பாழடைந்த வீட்டில் இருந்து யோகேஸ்வரன் தப்பிச்சென்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். உடனே யோகேஸ்வரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அவரது பெற்றோர். தற்போது, அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்தச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் யோகேஸ்வரனை கடத்திச்சென்று சித்திரவதை செய்திருந்த அந்த பாழடைந்த வீட்டுக்குச்சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் போலீசார் கடத்திச்சென்ற நபர்கள் குறித்து தீவிரமாகத் தேடிவந்தனர்.

இவ்விவகாரத்தில் அனகாபுத்தூரைச் சேர்ந்த டைசன் மற்றும் பொழிச்சலூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகியோரைக் கைது செய்ததோடு தலைமறைவாக உள்ள ஹரி மற்றும் கார்த்திக்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நகரமன்ற தலைவரின் கணவர் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய நகராட்சி ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.