ETV Bharat / state

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்

author img

By

Published : Feb 3, 2020, 12:26 PM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இன்று முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது.

12th-std-practical-examination-begins
12th-std-practical-examination-begins

சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகள் செய்முறை தேர்வினை இன்று எழுதினர். சென்னை மாவட்டத்தில் செய்முறை தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் செய்முறை தேர்வு நடைபெறுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தனர்.

12th-std-practical-examination-begins
செய்முறைத் தேர்வில் ஈடுபட்டுள்ள மாணவிகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை புதிய பாடத்திட்டத்தின்படி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாNdகளில் நடத்த வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், புறச் சிறுவர்களாக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வி தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு நியமிக்க வேண்டும்.

உயிரியல் பாட செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்கள் உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் பாடங்களில் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத் தேர்வின் போது கால்குலேட்டர் எடுத்து வர தேர்வர்களுக்கு அனுமதி வழங்கலாம். பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு

இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், நர்சிங் பொது, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் உள்ளிட்ட தொழிற் பாடங்களுக்கும் செய்முறை தேர்வு நடத்த வேண்டும்.

அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பொதுப்பிரிவு, தொழிற் பாடங்களுக்கான செய்முறை தேர்வினையும் நடத்திட வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

மாணவர்களிடம் கஞ்சா விற்பனை: பிகாரைச் சேர்ந்த இருவர் கைது

Intro:12 ம் வகுப்பு செய்முறை தேர்வு


Body:12 ம் வகுப்பு செய்முறை தேர்வு


சென்னை,

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இன்று (பிப்ரவரி 3 ந் தேதி) முதல் 13 ந் தேதி வரை நடக்கிறது.


சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் செய்முறை தேர்வினை இன்று எழுதினர். சென்னை மாவட்டத்தில் செய்முறை தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 7 ந் தேதி வரை முதல் கட்டமாகவும், எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக செய்முறை தேர்வில் மாணவர்கள் செய்ய உள்ளனர்.




பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அரசுத்தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை புதிய பாடத்திட்டத்தின்படி பிப்ரவரி 3ம் தேதி முதல் 13 ம் தேதி வரையிலான நாட்களில் நடத்த வேண்டும்.


பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், புறச் சிறுவர்களாக வேறு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் போதுமான கல்வி தகுதியுள்ள திறமையான பணியாளர்களை செய்முறைத் தேர்வு நடத்துவதற்கு நியமிக்க வேண்டும்.


உயிரியல் பாட செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்கள் உயிரி தாவரவியல் மற்றும் உயிரி விலங்கியல் பாடங்களில் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

இயற்பியல் பாட செய்முறைத் தேர்வில் பொழுது கால்குலேட்டர் எடுத்து வர தேர்வர்களுக்கு அனுமதி வழங்கலாம்.



பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் 13ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

இயற்பியல் ,வேதியியல் ,உயிரியல், தாவரவியல் ,விலங்கியல் ,புள்ளியியல், கம்ப்யூட்டர் அறிவியல், உயிரிவேதியியல், நுண்ணுயிரியல், நர்சிங் பொது, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் உள்ளிட்ட தொழிற் பாடங்களுக்கும் செய்முறை தேர்வு நடத்த வேண்டும்.


அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 25ம் தேதிக்குள் பொதுப் பிரிவு மற்றும் தொழிற் பாடங்களுக்கான செய்முறை தேர்வினையும் நடத்திட வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.















Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.