ETV Bharat / state

"தமிழ்நாட்டில் 12 கரோனா சித்த மருத்துவ சிகிக்சை மையங்கள் அமைக்கப்படும்"

author img

By

Published : May 9, 2021, 4:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை தருவதற்கு 12 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

covid
சிகிக்சை மையங்கள்

சென்னையில் கரோனா சிகிச்சைக்காக வியாசர்பாடியில் சித்த மருத்துவ மையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 240 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தில் 195 பேர் மிதமான அறிகுறிகளுடன் கோவிட் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி சித்தா கோவிட் மையத்தில் கடந்தாண்டு 2,290 நபர்கள் கோவிட் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற இயற்கை முறை மருத்துவமனைகள் விரிவுபடுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இந்த மாதத்திற்குள்ளாக தர்மபுரி, தேனி, நாமக்கல், கரூர்,திருவண்ணாமலை, அரியலூர், தென்காசி, மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

ஒருவாரத்திற்குள்ளாக தென் சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்தா கோவிட் மையம் துவக்கப்படவுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உள்மருந்துகளாக கபசுரக்குடிநீர், அமுக்கராசூரண மாத்திரை, பிரம்மானந்தபைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், ஆடாதொடை மணப்பாகு ஆகியவையும் வெளிமருந்துகளாக கற்பூராதி தைலம், பெயின்பாம் போன்றவைகளும் வழங்கப்படுகிறது.

வியாசர்பாடி சித்த மருத்துவ மையம் திறப்பு

'உணவே மருந்து' என்ற அடிப்படையில் தினமும் காலையில் சீரான குடிநீர், மாலையில் கரிசாலை பால், இரவில் சுக்கு கஞ்சி ஆகிய சிறப்பு மூலிகை வகை உணவுகள் நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புற சிகிச்சைகளாக காலையில் திறந்தவெளியில் யோகா, திருமூலர்பிராணாயாமம், வர்மசிகிச்சை சித்தர் முத்திரைகள், மூலிகை நீராவிசிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் ஒருங்கிணைந்த வகையில் நோயாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் 21 கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆகஅதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.