ETV Bharat / state

போக்சோவில் இதுவரை 1000 பேர் கைது - துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டி!

author img

By

Published : Jan 6, 2020, 7:17 PM IST

சென்னை: 1000 குற்றவாளிகளை இதுவரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ், கைது செய்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

1000 accuqest were arrested under the pocso from 2012  போக்சோவில் இதுவரை 1000 பேர் கைது  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி  சென்னை குற்றச் செய்திகள்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்  சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்சோவில் இதுவரை 1000 பேர் கைது- துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டிபோக்சோவில் இதுவரை 1000 பேர் கைது- துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டிபோக்சோவில் இதுவரை 1000 பேர் கைது- துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டிபோக்சோவில் இதுவரை 1000 பேர் கைது- துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டி

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் தனியார் கல்லூரியில், சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பங்கேற்று, சைபர் குற்றங்களைத் தடுப்பது குறித்து கல்லூரி மாணவிகளிடம் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' பெண்கள் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசக்கூடாது. தகவல்களைப் பரிமாறக்கூடாது.

கடந்த 6 மாத காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 25 பேரை தனிப்படையினர் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். காவலன் செயலி மூலம் இதுவரை 25க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோவில் இதுவரை 1000 பேர் கைது- துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டி

மேலும், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இதுவரை 1000 குற்றவாளிகள் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார். அதில் பல வழக்குகளை விசாரித்து வருவதாகவும் தெரிவித்த அவர், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்கள் கல்லூரிகளில் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முகநூலில் சிறார்களின் ஆபாச படங்களைப் பகிர்ந்த அஸ்ஸாம் இளைஞர் கைது!

Intro:Body:1000 குற்றவாளிகளை இதுவரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பேட்டி.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தனியார் கல்லூரியில் சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பங்கேற்று சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து கல்லூரி மாணவிகளிடம் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் ஜெயலட்சுமி

பெண்கள் சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது என்றும் தகவல்களை பரிமாற கூடாது என்றும் தெரிவித்தார்.மேலும் சிறார் பாலியல் சம்மந்தமான படங்களை பதிவிறக்கம் செய்த 2 பேரை சமீபத்தில் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 6 மாத காலத்தில் மட்டும் 25 குற்றவாளிகளை தனிப்படையினர் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாக அவர் கூறினார்.மேலும் காவலன் செயலி மூலம் இதுவரை 25 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 1000 குற்றவாளிகளை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பல வழக்கை விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பின்னர் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிகப்படுத்தி வருவதால் போக்சோ குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்கள் கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.