ETV Bharat / state

போலீசுக்கு பயந்து சரக்கு வாகனத்தை நடுரோட்டில் விட்டு தலை தெறிக்க ஓடிய ஆசாமி!

author img

By

Published : Jan 24, 2021, 12:29 AM IST

சென்னை: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு பயந்து ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு ஓடிய சம்பவம் பெருங்குளத்தூரில் நிகழ்ந்தது.

vehicle
சரக்கு வாகனம்

சென்னை பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முடிச்சூர் சந்திப்பு, வெளிவட்ட சாலை, மதனபுரம் அருகே ரோந்து போலீசார் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தைத் தணிக்கை செய்ய ரோந்து பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த முரளி, உதவி ஆய்வாளர் லட்சுமணன் நிறுத்தினர்.

இதனால் பயந்த வாகன ஓட்டுநர் சரக்கு வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு தப்பியோடினார். இதையடுத்து காவல் துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வாகனத்தின் பூட்டை உடைத்து பார்த்தப்போது வாகனத்தினுள் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. தப்பிச்சென்ற நபரை பீர்க்கன்காரணை ஆய்வாளர் பொன்ராஜ் தீவிரமாக தேடி வருகிறார்.
இதையும் படிங்க:ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திவந்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.