ETV Bharat / state

உதயநிதிக்கு முறை பொண்ணு.. ராமபிரான் பரம்பரையில் வந்த ராஜ வம்சம்.. வைரலாகும் பிரமீளா அக்கப்போர் வீடியோ!

author img

By

Published : Apr 5, 2023, 2:20 PM IST

Updated : Apr 5, 2023, 2:25 PM IST

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு முறை பொண்ணு என்றும் திமுக தன்னால் தான் ஆட்சியில் இருக்கிறது என்றும் பேஸ்புக்கில் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரமீளா
பிரமீளா

செங்கல்பட்டு: அண்மைக் காலமாக முகப்புத்தகம்(Facebook) வீடியோக்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் வீடியோக்களில் செங்கல்பட்டு பிரமீளா வீடியோக்களும் உள்ளன. திமுக, அதிமுக, சசிகலா, பாஜக என அனைத்து தரப்பினரையும் அலறவிட்டு வருகிறார் உப்பளப்பட்டி பிரமீளா. பேஸ்புக் வாசிகளை விலா நோகமல் சிரிக்க வைக்க இரவது முதலீடு கதவு, ஜன்னல் சாத்தப்பட்ட ஒரு சிறிய அறை மற்றும் ஒரு செல்போன் மட்டுமே.

பூட்டிய அறைக்குள் இருந்துக் கொண்டே இவர் பேஸ்புக் வாயிலாக தெறிக்கவிடும் கருத்துக்களைப் பார்த்து சிரித்து மகிழ்வதோடு அய்யோ பாவம் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு வீடியோவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் முறைப்பெண் எனவும், தன்னிடம் வம்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு ஒருபடி மேலே சென்று தன்னை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இவர்களை எல்லாம் விசாரியுங்கள் என திமுக முக்கிய நிர்வாகிகள் பெயரில் சில செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளார். தன்னால் தான் திமுக ஆட்சியில் இருக்கிறது எனவும், தான் மைக்கை பிடித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினால் திமுக, அதிமுக இரண்டும் காணாமல் போகும் எனவும் அக்கப்போர் செய்து வருகிறார் பிரமீளா.

சசிகலா, டிடிவி தினகரன் என்று சகட்டுமேனிக்கு அனைவரையும் இழுத்து வைத்து குமுறி எடுக்கும் இந்த அம்மணியைப் பற்றி விசாரித்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் வருகின்றன. இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் வசித்து வருகிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டு இவர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அப்போது இவர் என்னவாக இருந்தார் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றி எல்லாம் தகவல் இல்லை. அந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கி படித்தால் தமிழக வரலாறு மட்டுமல்ல இந்திய சரித்திரமே மாறும் என்று ஓவர் பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்.

இதில் ஒரு சோகமான காமெடி என்னவென்றால் அந்த புத்தகத்தை இவர் வெளியிடும்போது இவருக்கு பிஜேபியினர் முழுமூச்சாக உதவியுள்ளனர். அது குறித்த வீடியோ மற்றும் போட்டோ பதிவுகளையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி பாஜகவின் மானத்தையும் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் முன்னாள் முக்கிய பிரபலமும், இந்நாள் மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன், கே.டி.ராகவன் ஆகியோருடன் புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்துக்கொண்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிந்துள்ளார் பிரமீளா.

அந்த விழாவின்போது நடைபெற்றதாக சில சுவாரசியமான தகவல்களையும் அவர் வெளியிடுகிறார். அதில், புத்தக வெளியீட்டு விழாவின்போது தான் நிம்மதியாக படுத்து உறங்கியதாகவும், பிஜேபி கட்சியினர் இரவு பகலாக வேலை செய்து, போஸ்டர் முதற்கொண்டு ஒட்டி, இவருடைய விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்ததாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளதோடு, அந்த விழாவின்போது இஸ்லாமியப் பெண்ணைப் போல் புர்கா அணிந்து போஸ் கொடுத்துள்ளார் பிரமீளா.

இது பற்றி குறிப்பிடும் பிரமிளா, தான் ஒரு மாதம் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருந்ததாகவும், இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்ற அன்று மாலையே, தான் மீண்டும் இந்துவாக மாறிவிட்டதாகவும் கூறி மெய்சிலிர்க்க வைக்கிறார். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, உதயநிதி ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றும்படி, தங்கள் குடும்பத்திடம், அதாவது ஸ்டாலின் குடும்பத்திடம் இவர் தற்போது வலியுறுத்தி வருவதாகவும் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார்.

'இது மட்டுமா... இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு' என்று வடிவேலு பாணியில் இவர் சுற்றிய ரீலின் கிளைமாக்ஸ் ஒன்னு இருக்கு "தங்கள் குடும்பம் ராமபிரான் பரம்பரையில் வந்தது என்றும், சேர, சோழ, பாண்டியர்களைப் போல தங்கள் குடும்பமும் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது என்றும், ஒரு காலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மொத்தமே இவர்கள் குடும்பத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்றும் புதிய சரித்திரம் படைக்கிறார் உப்பளப்பட்டி பிரமீளா.

பிரமிளாவின் வீடியோக்களை பார்த்த பலர் சிரித்துவிட்டு காமெடி பீஸ் என்று கருத்துக்களைப் பதிவிட்டு வந்தாலும் சிலர் உடனடியாக இவர் மனநல காப்பகத்திலோ அல்லது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறையிலோ அடைக்க வேண்டும் என கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வேடசந்தூர் அருகே விநோதம்! செருப்பு, துடைப்பத்தால் அடிவாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

Last Updated : Apr 5, 2023, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.