ETV Bharat / state

நடுப்பழனியில் தைப்பூசம் கோலாகலம்

author img

By

Published : Jan 28, 2021, 7:38 PM IST

செங்கல்பட்டு: நடுப்பழனி எனப் பெயர் பெற்ற பெருங்கருணை முருகன் கோயிலில் இன்று தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது.

நடுப்பழனி
நடுப்பழனி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்துள்ளது பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி திருக்கோயில்.
இத்திருக்கோயில் நடுப்பழனி என்றும் பெயர் பெற்றுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (ஜன. 28) இத்திருக்கோயிலில், மரகத தண்டாயுதபாணி எனப்படும் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனையும் நிகழ்த்தப்பட்டன.

தைப்பூசத்தையொட்டி நடைபெற்ற சுப்பிரமணிய ஹோமத்தை, ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். முருகப் பெருமான் சந்நிதியில், திருமுறை பாராயணம் ஓதப்பட்டது. மறைமலை நகர், வேல் பாதை யாத்திரை மன்றத்தின் சார்பாக, சுவாமிக்கு வைரவேல் சாற்றப்பட்டது.

மதுராந்தகம், செய்யூர், அச்சிறுப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், தைப்பூச விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்குத்தொடரும் ஆன்லைன் கல்வி... அறிவூட்டுகிறதா? அழுத்தம் தருகிறதா? - ஓர் கள ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.