ETV Bharat / state

கல்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பத்திரப் பதிவுக்குத் தடை!

author img

By

Published : Feb 28, 2021, 9:56 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய சுற்றுவட்டாடத்தில் உள்ள 14 கிராமங்களில், பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Prohibition of bond registration in Kalpakkam area
கல்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் பத்திரப் பதிவுக்குத் தடை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக சில வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க, கல்பாக்கம் கதிரியக்க பகுதிகளுக்கான உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் ஆணையராக, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளார். இந்நிலையில், திட்ட குழுமத்தின் ஆணையர் சார்பாக, செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு குறிப்பானை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள, திருக்கழுக்குன்றம் ஊராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி உள்ளிட்ட 14 கிராமங்களில் எந்தவிதமான பத்திரப் பதிவும் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் வீட்டுமனை, வணிகம் சார்ந்த பயன்பாடுகளுக்காக யாரும், இடம் வாங்கவோ விற்கவோ தடை செய்யப்பட்டுள்ளதால், கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் விதிகளை மீறி இந்தியில் கடிதம் அனுப்பும் அமைச்சகங்கள்- எம்பி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.