ETV Bharat / state

மதுராந்தகம் அருகே பழமைவாய்ந்த கற்சிலை கண்டுபிடிப்பு

author img

By

Published : Feb 3, 2021, 8:09 AM IST

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் பொழுது ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லால் வடிக்கப்பட்ட கடவுள் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

discovery-of-the-ancient-statue-near-madurantakam
discovery-of-the-ancient-statue-near-madurantakam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசன் கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தற்பொழுது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது வீட்டிற்காக, நேற்று (பிப். 2) அடித்தளம் தோண்டப்பட்டது.

அப்பொழுது, பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த, கல்லால் வடிக்கப்பட்ட ஐந்தடி உயரமுள்ள கடவுள் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர், அறநிலையத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சிலையைக் கைப்பற்றி, ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

மதுராந்தகம் அருகே பழமைவாய்ந்த கற்சிலை கண்டுபிடிப்பு

அரசன் கோவில் பகுதியில் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இதனால், தற்போது கண்டெடுக்கப்பட்ட சிலை, அக்கோயிலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டுவந்த சிலையாக இருக்கலாம் என் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:’தேர்தல் களத்தில் யாரோ திட்டமிட்டு வன்முறையை தூண்டுகின்றனர்’ - பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.