ETV Bharat / state

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி!

author img

By

Published : Jun 4, 2019, 5:27 PM IST

சென்னை: ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள், அலைபேசிகள் ஆகியவற்றை மோசடி செய்ததுடன், அதனை நகைப் பறிப்பிற்கு பயன்படுத்துவதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கைக்கோரி தங்கப்பட்டறை உரிமையாளர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி!

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் அப்பகுதியில் தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தன்னை மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரசாத் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரசாத் கூறியதாவது:

சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் தன்னிடம், ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி தன்னை மூன்று இருசக்கர மோட்டார் வாகனங்கள், மூன்று கைப்பேசி ஆகியவற்றை வாங்கச் செய்தார். வாகனங்கள் மற்றும் கைபேசி ஆகியவற்றை பெற்று சென்ற இவர், ஸ்விகி நிறுவனத்துடன் இணைக்கவில்லை. சந்தேகப்பட்டு சங்கரிடம் விசாரித்தபோது, வண்டிகள் மற்றும் அலைபேசிகளை சங்கிலி பறிப்பு தொழிலுக்குப் பயன்படுத்துவதாக கூறி தன்னை மிரட்டி அனுப்பினார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை என்பதால் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். தன்னைப் போல் பலரையும், சங்கர் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனது வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை மீட்டுத் தர வேண்டும், என்றார்.

பாதிப்புக்குள்ளான பிரசாத் பேட்டி

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி*

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி இருசக்கர வாகனங்கள் மற்றும் அலைபேசிகள் ஆகியவற்றை மோசடி செய்ததுடன் அதனை செயின் பறிப்பிற்கு பயன்படுத்துவதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத், இவர் அப்பகுதியில் தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் தரப்பிலிருந்து ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தன்னை மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரசாத், தனக்கு சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் தன்னிடம், எளிதில் லாபம் ஈட்டும்படி ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி தன்னை 3 இருசக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 3 ஆண்டுராய்டு அலைபேசிகளை வாங்கச் செய்ததாக தெரிவித்தார்.

மேலும்,  அதனை ஸ்விகி நிறுவனத்துடன் இணைத்து தருவதாக கூறி பெற்றுச் சென்ற சங்கர் சில மாதங்கள் ஆகியும் மேற்படி நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாததால் தான் ஐயப்பட்டு அவரிடம் சென்று விசாரித்ததாகவும், அப்போது சங்கர் உனது வண்டிகள் மற்றும் அலைபேசிகளை செயின் பறிப்பு தொழிலுக்கு பயன்படுத்துவதாகவும் கூறி தன்னை மிரட்டி அனுப்பியதாக உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது தொடர்பாக காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பலனில்லை என்பதால் காவல் ஆணையர் அலுவலகத்தை நாடி வந்ததாகவும், இது தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தனக்கு அறிவுருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தன்னைப் போல் பலரையும் இந்த கும்பல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனது வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை மீட்டுத்தரும்படி காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.

(பேட்டி - பாதிக்கப்பட்ட பிரசாத்)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.