ETV Bharat / state

முதுகலைப் படிப்பிற்கு தனியாக போட்டித் தேர்வு! - அண்ணா பல்கலைக்கழகம்

author img

By

Published : Apr 28, 2019, 5:36 PM IST

Updated : Apr 28, 2019, 5:53 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் உறுப்புக் கல்லுாரிகளில் முதுகலைப் படிப்பிற்கு சேர தனியாக போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் துறைகள், பல்கலைக்கழக கல்லூரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்பில் 2019-20ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கு அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு 2019 எழுத வேண்டும்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வினை எழுதி தகுதிபெற்றால், விதிகளின் படி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பட்டயப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.800ம், எஸ்.சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் ரூ.400ம் இணைய வழி செலுத்த வேண்டும்.

இத்தேர்வினை எழுதுவதற்கு மே 5ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு ஜூன் 23ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, திட்டமிடல் மற்றும் கட்டடிக்கலைக்கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றிலும், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மண்டலக்கல்லுாரியிலும், திருச்சி, விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லுாரிகளிலும் இந்த நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர்கள் சேர்வதற்கான தகுதி, பதிவு செய்தல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளார்.

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கல்லுாரியில் சேர
 முதுகலைப் படிப்பிற்கு தனியாக போட்டித் தேர்வு 

சென்னை, 

அண்ணாப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் துறைகள், பல்கலைக்கழக கல்லுாரிகளில் நடத்தப்படும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்பில் 2019-20 ம் கல்வியாண்டில் சேர்வதற்கு அண்ணாப் பல்கலைக் கழக  பொது நுழைவுத்தேர்வு 2019 எழுத வேண்டும். 
 வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நுழைவுத் தேர்வினை எழுதி தகுதிப்பெற்றால் விதிகளின் படி சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 
எம்.பி.ஏ, எம்.சிஏ மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 800 ருபாயும், எஸ்.சி,எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 400 ருபாயும் ஆன்லைன் முலம்  செலுத்த வேண்டும்.
இந்த தேர்வினை எழுதுவதற்கு மே 5 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை ஆன்லைன் முலம் விண்ணப்பிக்கலாம்.
 எம்.சி.ஏ. படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ.படிப்பிற்கு ஜூன் 22 ந் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு ஜூன் 23 ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நுழைவுத் தேர்வு நடைபெறும். 

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துறைகளான கிண்டி பொறியியல் கல்லுாரி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லுாரி, திட்டமிடல் மற்றும் கட்டடிக்கலைக்கல்லுாரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகியவற்றிலும், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்துார் அண்ணாப் பல்கலைக்கழக மண்டலக்கல்லுாரியிலும், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் அண்ணாப் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுாரியில் உள்ள முதுகலைப்பட்டிப்பில் இந்த நுழைவுத் தேர்வு முலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 

மாணவர்கள் சேர்வதற்கான தகுதி, பதிவு செய்தல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை  www.annauniv.edu/aucet2019  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார். 

 










Last Updated : Apr 28, 2019, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.