ETV Bharat / state

ஊராட்சிகளில் சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு!

author img

By

Published : Jul 17, 2019, 2:43 PM IST

சென்னை: ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஊராட்சிகளில் சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், சென்னை புறகர் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை மீண்டும் அமைத்திட வேண்டும் என்றும், சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பை எடுப்பதற்கான உபகரணங்கள் கூடுதலாக வாங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்திட கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் ஒரு கி.மீ தூரமுள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 19 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கபடுகிறது. இதில் திடக்கழிவு மேலாண்மை அரசுக்கு சவால் நிறைந்த பணியாக இருந்தாலும் திறம்பட கையாண்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் உபகரணங்கள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Intro:Body:ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், சென்னை புறகர் பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை மீண்டும் அமைத்திட வேண்டும் , சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பை எடுப்பதற்கான உபரகணங்கள் கூடுதலாக வாங்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்திட கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் ஒரு கி.மீ தூரமுள்ள சாலைகள் அனைத்தும் சீர் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கபடுவதாகவும், திடக்கழிவு மேலாண்மை அரசுக்கு சவால் நிறைந்த பணியாக இருந்தாலும் திறம்பட கையாண்டு வருவதாகவும் , தேவைப்படும் இடங்களில் கூடுதல் உபகரணங்கள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.