ETV Bharat / state

அரியலூரில் மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று!

author img

By

Published : Apr 19, 2020, 10:57 AM IST

அரியலூர்: சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஒருவரின் மருந்தகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Medical staff corana  அரியலூர் மாவட்டச் செய்திகள்  செந்துறைச் செய்திகள்  அரியலூர் கரோனா செய்திகள்  two more corona positive in ariyalur district
அரியலூரில் மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று!

அரியலூர் மாவட்டத்தில் இருந்து சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஐந்து பேருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், செந்துறையைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இல்லையென்பது தெரியவர அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அவரின் மருந்தகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, பெண் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொற்று உறுதியான இருவரும் நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரியலூரில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று

மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் பத்து பேருக்கும் கரோனா பரிசோதனை தற்போது செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் இரண்டு பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கால் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - அதிர்ச்சித் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.