ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

author img

By

Published : Oct 22, 2021, 1:30 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 1 pm  top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  நண்பகல் செய்திகள்  செய்திச் சுருக்கம்  ஒரு மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

1. அக்.27இல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க கொண்டுவரப்படவுள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 27 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.

2. கீழடி கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளும் திட்டம்: தொடங்கி வைத்த முதலமைச்சர்

கீழடி விசைப்பலகை, இ - முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

3. 14 விழுக்காடு அகவிலைப்படியை தீபாவளி பரிசாக வழங்க வேண்டும்- மு.க. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 14 சதவீதம் அகவிலைப்படியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீபாவளி பரிசாக உடனடியாக வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

4. ஆலங்காயத்தில் ஒன்றிய குழு மறைமுக தேர்தல்: காவல்துறை பலத்த பாதுகாப்பு

ஆலங்காயத்தில் ஊரக உள்ளாட்சி ஒன்றிய குழு மறைமுக தேர்தலையொட்டி காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

5. ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரண வழக்கு - மீண்டும் விசாரணை தொடக்கம்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல்துறையினர் இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

6. புதிய மாளிகை வீட்டால் ரெய்டில் சிக்கிய இளங்கோவன்?

புதிய மாளிகை வீட்டால், இளங்கோவன் ரெய்டில் சிக்கியதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது.

7. 'ஆட்சி, கட்சியில் அளப்பறிய பங்களிப்பு- 57இல் அமித் ஷா.. பிரதமர் வாழ்த்து!

இன்று பிறந்தநாள் காணும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8. 'ரஸ்ட்' படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 'ரஸ்ட்' படப்பிடிப்பின் போது நடிகர் அலெக் பால்ட்வின் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் சுட்ட போது எதிர்பாரதவிதமாக பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.

9. BB Day 19: அபிஷேக்கின் நரி தந்திரங்களால் குழப்பம்... உடையுமா பிக்பாஸ் குடும்பம்?

பஞ்சதந்திரம் டாஸ்க் தொடங்கிய நாள் முதல் அபிஷேக் செய்த நரி தந்திரங்களால் போட்டியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

10. நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை- ஆய்வுக் குழு

நடிகர் விவேக் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லையென்று தேசிய தடுப்பூசி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.