ETV Bharat / state

புனித அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாய்ந்த காளைகள்

author img

By

Published : Jan 19, 2020, 12:38 PM IST

அரியலூர்: புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது.

St. Anthony's Temple Jallikattu
St. Anthony's Temple Jallikattu

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் கோயில் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் . இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டியில் 450 காளைகள், 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளைகளை அடக்கிய காளையர்கள், காளையர்களுக்கு அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

புனித அந்தோணியார் கோயில் ஜல்லிக்கட்டு

மேலும் இப்போட்டியில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்தன. ஜல்லிக்கட்டுப் போட்டியை முன்னிட்டு அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீரர்களை அலறவிட்ட குலமங்கலம் காளை: காரை பரிசாக வழங்கிய ஓபிஎஸ்!

Intro:அரியலூர் - ஜல்லிக்கட்டு போட்டி
Body:அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் புனித அந்தோனியார் கோவில் பொங்கலை முன்னிடு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம் .

இந்நிலையில் இந்தாண்டு அக்கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


போட்டியை அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர்

போட்டியில் 450 காளைகள் மற்றும் 250க்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

காளைகளை அடக்கிய காளையர்கள், காளையர்களுக்கு அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது

முன்னதாக உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்தன.

Conclusion:ஜல்லிக்கட்டு முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.