ETV Bharat / state

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றி வழிபாடு!

author img

By

Published : Aug 3, 2020, 12:54 PM IST

அரியலூர்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் பூணூல் மாற்றி வழிபாடு செய்தனர்.

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றி வழிபாடு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றி வழிபாடு

இந்து மதத்தில் உபநயனம் செய்து கொண்ட பிராமணர் உள்ளிட்ட சில பிரிவினர் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திர தோடு கூடிய பௌர்ணமி நாளில் தாங்கள் அணிந்து கொண்டுள்ள பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து வேதம் படிக்க தொடங்குவது பழங்காலம் முதல் நடைபெற்று வருகின்ற ஐதிகமாகும்.

இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் புதிய பூணூல் அணிந்து மந்திரங்களை ஜெபித்து தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

இதில் ஏராளமானவர்கள் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை கடைபிடித்து பூணூலை மாற்றிக்கொண்டனர்.

இதையும் படிங்க: சங்கரன்கோவில்: எளிமையாக நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.