ETV Bharat / state

ஆடிப்பெருக்கு விழா; சப்பரத்தேர் விற்பனை மந்தம்! கவலையுடன் கூறும் ஆசாரி!

author img

By

Published : Aug 3, 2019, 3:26 AM IST

அரியலூர்: ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ள நிலையில் சப்பரத்தேர் விற்பனை மந்தமாக இருப்பதாக ஆசாரி பாலு கூறியுள்ளார்.

SALES DOWN

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சப்பரத்தேர் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை ஆடி 18க்கு மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தைகள் விளையாட்டு தேரான சப்பரத்தேரை வாங்கி, அதில் தங்களுக்கு பிடித்த சாமி படத்தை வைத்து தெருக்களில் இழுத்து சென்று விளையாடுவார்கள். சப்பரத்தேர் வாங்க வசதி இல்லாதவா்கள் தீபெட்டியில் தேர் செய்து விளையாடுவார்கள்.

SAPPARA CHARIOT  AADI FESTIVAL  SALES DOWN
சப்பரத்தேர் விற்பனை மந்தம் ஏமாற்றத்துடன் ஆசாரி

இது நாளடைவில் நகா்புறங்களில் மறைந்து வந்த சூழ்நிலையில் தற்போது கிராமபுரங்களிலும் மறைந்து வருகின்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சப்பரத்தேர் ஒன்று கூட விற்பனையாகவில்லை என கவலையுடன் ஆசாரி பாலு கூறுகிறார்.

ஆடிப்பெருக்கு விழா

மேலும் தான் ஆண்டுக்கு 500 தேர் வரை விற்பனை செய்து வந்ததாகவும், இந்த ஆண்டுக்கான விற்பனை வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் இதுவரை ஒன்று கூட விற்பனையாகமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போனை பயன்படுத்தி விளையாடி வருவதால் விழாக்களின் சிறப்புகள் அனைத்தும் மறந்துபோய் வருவதாக வேதனை தெரிவித்தார்.

Intro:அரியலூர் - ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ள நிலையில் மந்தமான நிலையில் உள்ள சப்பரத்தேர் விற்பனைBody:தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற உள்ள நிலையில் மந்தமான நிலையில் உள்ள சப்பரத்தேர் வியாபாரம் . முன்பு எல்லாம் ஆடி 18 க்கு 3 நாட்களுக்கு முன்பு குழந்தைகள் விளையாட்டு தேரான சப்பரத்தேரை வாங்கி அதில் தங்களுக்கு பிடித்த சாமி படத்தை வைத்து தெருக்களில் இழுத்து சென்று விளையாடுவார்கள். வசதி இல்லாதவா்கள் தீபெட்டியில் தோ் செய்து விளையாடுவார்கள்.இது நாளடைவில் நகா் புறங்களில் மறைந்து வந்த சூழ்நிலையில் தற்போது கிராம புரங்களில் மறைந்து வருகின்றது.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் நேற்று முதல் விற்பனைக்கு வைத்துள்ள சப்பரத்தேர் ஒன்று கூட விற்பனையாக வில்லை என கவலை
இதுகுறித்து ஆசாரி பாலு கூறும்பொழுது ஆண்டுக்கு ஆண்டு 500 தேர் வரை விற்பனை செய்வதாகவும் தற்பொழுது நேற்று முதல் விற்பனைக்கு வைத்துள்ள நிலையில் இதுவரை ஒன்று கூட விற்பனை ஆகாது இது ஏமாற்று அளிப்பதாகவும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி விளையாடி வருவதால் விழாக்களின் சிறப்புகள் அனைத்தும் மறந்து போய் வருகின்றனர். Conclusion:ஆகையால் எங்களைப் போன்ற சிறு தொழில் செய்பவர்களின் வியாபாரம் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளதாகவும் பொருட்களை மறக்கமுடியாமல் ஆண்டுக்காண்டு விற்பனைக்கு போட்டு வருவதாகவும் தெரிகிறார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.