ETV Bharat / sports

ஆஸ்திரேலியா ஓபன் - நான்காவது சுற்றுக்கு செரீனா தகுதி

author img

By

Published : Feb 12, 2021, 10:44 PM IST

தடுமாற்றம், அனுபவ ஆட்டம் என இரு வகையான ஆட்டங்களை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் மூன்றாவது சுற்றில் ரஷ்யா வீராங்கனையை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார் செரீனா வில்லியம்ஸ்.

Serena williams
செரினா வில்லியம்ஸ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் அனஸ்டசியா போடாபோவாவுக்கு எதிரான போட்டியில் பேராடி வென்றுள்ளார் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் விளையாட்டில் முக்கிய தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இன்று (பிப். 12) நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செrஈனா வில்லியம்ஸ் - ரஷ்யாவின் அனஸ்டசியா போடபோவா மோதினர்.

உலக தரவரிசைப் பட்டியலில் 101ஆவது இடத்தில் இருக்கும் அனஸ்டசியா, முதல் செட்டில் செரினாவை தடுமாற வைத்தார். அவரது சிறப்பான ஆட்டத்தை கட்டுப்படுத்த கடுமையாக போராடினார் வில்லியமஸ்.

முதல் செட்டில் 7-6 என்ற செரீனாமுன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா 6-2 என்ற கணக்கில் அனஸ்டசியாவை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நான்காவது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார்.

செரினா - அனஸ்டசியா இடையேயான மூன்றாவது சுற்று போட்டி

பெலராஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்யனா சபாலெங்கவுக்கு எதிராக நான்காவது சுற்றில் விளையாடவுள்ளார் செரீனா.

இதையும் படிங்க: சதமடித்து மிரட்டிய ரிஸ்வான்; பரபரப்பான அட்டத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.