ETV Bharat / sports

பிரஞ்சு ஓபன் : தொடரிலிருந்து விலகிய செரீனா!

author img

By

Published : Sep 30, 2020, 4:34 PM IST

உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Serena Williams withdraws from French Open with an achilles injury
Serena Williams withdraws from French Open with an achilles injury

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிரபல டென்னிஸ் தொடரான பிரஞ்சு ஓபன் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் உலகின் முன்னணி வீரர் / வீராங்கனைகள் வெற்றிப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், குதிங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவாதாக இன்று (செப்.30) அறிவித்துள்ளார். இத்தகவலை பிரஞ்சு ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பு தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக செரீனா வில்லியம்ஸ், பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் தனது நாட்டைச் சேர்ந்த சக வீராங்கனையான கிறிஸ்டி அஹ்னை 7-6, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ஹைதராபாத் vs டெல்லி - ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.