ETV Bharat / sports

ஹாபர்ட் இன்டர்நேஷனல்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய சானியா மிர்சா இணை!

author img

By

Published : Jan 14, 2020, 7:06 PM IST

சிட்னி: ஹாபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்சா - உகேர்னிய வீராங்கனை நடியா கிச்னோவிக் இணை முன்னேறியுள்ளது.

hobart-international-sania-mirza-advances-to-womens-doubles-quarterfinals
hobart-international-sania-mirza-advances-to-womens-doubles-quarterfinals

மகளிருக்கான ஹாபர்ட் இன்டர்நேஷன்ல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதன் இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரேனியாவின் நடியா கிச்னோவிக் இணையை எதிர்த்து ஜார்ஜியாவின் ஓக்‌ஷானா - ஜப்பானி மியூ கடோ இணை ஆடியது.

இந்த போட்டியின் தொடக்க செட்டினை ஜார்கியா இணை 2-6 எனக் கைப்பற்ற, இரணடாவது செட்டில் சுதாரித்துக்கொண்டு ஆடிய சானியா இணை அந்த செட்டை 7-6 எனக் கைப்பற்றியது. பின்னர் நடந்த மூன்றாவது செட்டில் சானியா இணை ஆக்ரொஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடைசி செட்டினை 10-3 என்றக் கணக்கில் சானியா இணைக் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் வரை நீடித்தது.

காலிறுதிப் போட்டியில் சானியா இணையை எதிர்த்து அமெரிக்காவின் வானியா கிங் - கிறிஸ்டினா மெக்காலே இணை ஆடவுள்ளது.

இதையும் படிங்க: பார்சிலோனா பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

Intro:Body:

dd


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.