ETV Bharat / sports

பிரஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய வாவ்ரிங்கா, ஸ்வெரவ்!

author img

By

Published : Sep 28, 2020, 5:29 PM IST

பாரிஸ்: பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்கா, அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

French Open: Wawrinka routs Murray in Slam champ matchupFrench Open: Wawrinka routs Murray in Slam champ matchup
French Open: Wawrinka routs Murray in Slam champ matchup

டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, பிரிட்டனின் ஆண்டி முர்ரேவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த வாவ்ரிங்கா 6-1, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முர்ரேவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற மற்றோரு ஆட்டத்தில் ஜெர்மனியின் நட்சத்திர வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், ஆஸ்திரியாவி டெனிஸ்நோவாக்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்வெரவ் 7-5, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் நோவாக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020 : பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.