ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

author img

By

Published : Jun 7, 2021, 11:20 AM IST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தானின் எலெனா ரைபாகினாவை நான்காவது சுற்றில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி
செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்று முறை தொடர் வெற்றியாளரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸை, கஜகஸ்தானின் எலெனா ரைபாகினா நான்காவது சுற்றில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சியடையச் செய்தார்.

நடைபெற்ற 23ஆவது கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 1 மணி நேரம் 17 நிமிடங்களிலேயே செரீனாவை வீழ்த்தி, அனைவரையும் எலெனா அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இது அவர் கலந்துகொண்ட மொத்த போட்டிகளில் 64ஆவது போட்டியாகும். இவர் பங்கு பெறும் 16ஆவது கிராண்ட் ஸ்லாம் போட்டியின் முதல் சுற்று இதுவாகும்.

இது குறித்து செரீனா பேசுகையில், "எனக்கு இங்கே சில நல்ல போட்டிகள் கிடைத்தன. எனக்குச் சிறந்த ஆடுகளம் அமையவில்லை. ஆனால், இறுதியாக இந்த ஆடுகளத்தில் சில வெற்றிகளைப் பெற்றதுகூட நல்லது. நடைபெற்ற போட்டி நிச்சயமாக நெருக்கமாக இருந்தது" என்றார்.

மேலும் நடைபெறவிருக்கும் காலிறுதியில் எலெனா, ரஷ்யாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை எதிர்கொள்வார்.

விக்டோரியா வீராங்கனை அஸரெங்காவை, 29 வயதான அனஸ்தேசியா தனது ஐந்தாவது சுற்றில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இது அனஸ்தேசியாவிற்கான ஏழாவது கிராண்ட்ஸ்லாம் காலிறுதியாகும். மேலும் ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே அவர் விளையாடச் செல்லும் முதல் முறையாகும்.

இதே போன்று ஸ்லோவேனியாவின் டென்னிஸ் வீரர் தமாரா, ரோமேனியாவின் சோரானாவை தனது முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வீழ்த்தி காலிறுதியில் உள் நுழைந்தார். காலிறுதியில் தமாரா, ஸ்பெயினின் பவுலா படோசாவை சந்திப்பார். பவுலா, செக் குடியரசின் மார்க்கெட்டா வொண்ட்ரூசோவாவை 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இதையும் படிங்க : பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி - ரோஜர் பெடரர் விலகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.