ETV Bharat / sports

யூ.எஸ்.ஓபன்: கால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய போபண்ணா இணை!

author img

By

Published : Sep 6, 2020, 2:48 PM IST

நியூயார்க்: யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவாலோ இணை வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Bopanna-Shapovalov advance to quarterfinals of men's doubles in US Open
Bopanna-Shapovalov advance to quarterfinals of men's doubles in US Open

யூ.எஸ்.ஓபன் 2020 டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப். 06) நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவாலோ இணை - ஜெர்மனியின் ஆண்ட்ரியாஸ் மிஸ், கெவின் கிராவிட்ஸ் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெவின் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு மற்றும் மூன்றாவது செட்டை ரோகன் போபண்ணா இணை 6-4, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன் மூலம் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா, டெனிஸ் ஷபோவாலோ இணை 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் கெவின் கிராவிட்ஸ், ஆண்ட்ரியாஸ் மிஸ் இணையை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நாளை நடைபெறவுள்ள கால் இறுதி சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா இணை, ஜீன்-ஜூலியன் ரோஜர்(Jean-Julien Rojer) இணையை எதிர்த்து விளையாட உள்ளது.

இதையும் படிங்க:யூஎஸ் ஓபன் : நான்காம் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.