ETV Bharat / sports

கிங் இஸ் பேக்... 8ஆவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபனை வென்ற நோவாக் ஜோகோவிச்!

author img

By

Published : Feb 2, 2020, 6:33 PM IST

Updated : Feb 2, 2020, 7:36 PM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர்  பிரிவுக்கான இறுதிப் போட்டியில் டாமினிக் தீமை வீழ்த்தி செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

australian-open-djokovic-beats-dominic-thiem-and-won-australian-open-for-the-eighth-time
australian-open-djokovic-beats-dominic-thiem-and-won-australian-open-for-the-eighth-time

2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து ஆஸ்திரியாவின் டாமினிக் தீம் ஆடினார்.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக டாமினிக் தீம் அரையிறுதியில் ஸ்வெரவையும், காலிறுதியில் நடாலையும் வீழ்த்திருந்ததால், ஜோகோவிச் உடனான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நோவாக் ஜோகோவிச் சாதனைகள்
நோவாக் ஜோகோவிச் சாதனைகள்

மறுபக்கம் ஜோகோவிச் அரையிறுதியில் நட்சத்திர வீரர் ஃபெடரரை வீழ்த்தியிருந்ததால், இறுதிப் போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றிபெறுவார் என்ற எண்ணங்கள் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பிரதிபலித்தது.

நோவாக் ஜோகோவிச்
நோவாக் ஜோகோவிச்

பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஜோகோவிச் டாஸ் வெல்ல, முதல் செர்வை ஜோகோவிச் தொடங்கினார். முதல் செட் ஆட்டத்தில் முதல் புள்ளியை ஜோகோவிச் கைப்பற்ற, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 3-0 என ஜோகோவிச் முன்னிலைப் பெற, பின்னர் டாமினிக் தீம் 3-1 என முதல் புள்ளியைப் பெற்றார்.

பின்னர் இது 4-2, 4-3, 4-4 என்ற நிலைக்கு வந்தது. இதனால் ரசிகர்களின் கரவொலி ஒவ்வொரு புள்ளிக்கும் எதிரொலித்தது. இறுதியாக ஜோகோவிச் 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றி, வெற்றியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

முதல் செட்டைக் கைப்பற்றிய ஜோகோவிச்
முதல் செட்டைக் கைப்பற்றிய ஜோகோவிச்

இதையடுத்து இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியது. இந்த செட்டில் டாமினிக் ஜோகோவிச்சிற்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் டாமினிக் தீம் 4-2 என முன்னிலைப் பெற, ஜோகோவிச் 4-4 என்ற நிலைக்கு பின்தொடர்ந்துவந்தார். பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய டாமினிக் தீம் 6-4 என இரண்டாவது செட்டைக் கைப்பற்ற, ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இரண்டாவது செட்டைக் கைப்பற்றிய டாமினிக் தீம்
இரண்டாவது செட்டைக் கைப்பற்றிய டாமினிக் தீம்

முதல் செட் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை, இரண்டாவது செட் ஆட்டத்தில் டாமினிக் தீம் சரிசெய்ய, மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது. இதிலும் டாமினிக் தீம் 4-0 என முன்னிலைப் பெற, பின் ஜோகோவிச் 1-4 என முதல் புள்ளியைப் பெற்றார்.

அதையடுத்து இந்த ஆட்டம் 5-2 என்ற நிலைக்குச் செல்ல, மூன்றாவது செட்டை டாமினிக் தீம் 6-2 என அதிரடியாகக் கைப்பற்றினார். இதனால் மூன்று செட்களின் முடிவில் டாமினிக் தீம் 2-1 என முன்னிலையோடு நான்காவது செட் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

நான்காவது செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் 2-2 என போட்டியிட, ஜோகோவிச் 3-2 என முன்னிலைப் பெற்றார். ஒவ்வொரு புள்ளியும் ட்யூஸ் வரை செல்ல, ராட் லேவர் அரேனா பரபரப்பின் உச்சத்திற்குச் சென்றது.

டாமினிக் தீம்
டாமினிக் தீம்

மூன்றாவது புள்ளியைப் பெற்று டாமினிக் தீம் சமன் செய்ய, பதிலுக்கு ஜோகோவிச் நான்காவது புள்ளியைப் பெற்று 4-3 என முன்னிலைப்பெற்றார். அதனைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 5-3 என முன்னிலையிலேயே இருந்தார்.

அதையடுத்து நான்காவது செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற, ஆட்டம் கடைசி செட்டான ஐந்தாவது செட்டிற்குச் சென்றது. தொடர்ந்து இரண்டு செட்டை இழந்தபின், ஜோகோவிச் முழுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி நான்காவது செட்டைக் கைப்பற்றியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஐந்தாவது செட்டில் ஜோகோவிச் - டாமினிக் தீம் இரு வீரர்களும் தவறு செய்யக் கூடாது என்பதால் நிதானமாகவே ஆடினர். ஐந்தாவது செட்டின் முதல் புள்ளியை தீம் கைப்பற்றி, முன்னிலைப் பெற்றார்.

பின்னர் 4-2 என ஜோகோவிச் முன்னிலைப் பெற, ஆட்டம் 5-4 என்ற நிலைக்குச் சென்றது. இறுதியாக 6-4 என ஜோகோவிச் ஐந்தாவது செட்டைக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரை வென்றார்.

இந்த வெற்றியுடன் சேர்த்து எட்டாவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஆவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபனை வென்ற நோவாக் ஜோகோவிச்
8ஆவது முறையாக ஆஸ்திரேலியன் ஓபனை வென்ற நோவாக் ஜோகோவிச்

இதையும் படிங்க: இனி 'நோவாக் நோவாக்' என்ற குரல்கள் அதிகமாக எழும்!

Intro:Body:

Australian Open: Djokovic vs Dominic Thiem


Conclusion:
Last Updated : Feb 2, 2020, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.