ETV Bharat / sports

பாரா ஆசிய விளையாட்டு போட்டி; தங்கப் பதக்கங்களை வேட்டையாடும் இந்திய வீரர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 1:32 PM IST

Para Asian Games 2023: சீனாவில் நடைபெறும் 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதங்களை குவிக்கின்றனர். மொத்தம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 96 பதங்கங்களைப் பெற்று வரிசைப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

Para Asian Games 2023
பாரா ஆசிய விளையாட்டுப்போட்டி

ஹாங்சோ: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இந்தியா 24 தங்கம், 29 வெள்ளி, 43 வெண்கலம் என மொத்தம் 96 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. 434 பதக்கங்களைப் பெற்று முதல் இடத்தில் சீனாவும், 108 பதக்கங்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் ஈரானும், 120 பதக்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தில் ஜப்பான் ஆகிய நாடுகளும் உள்ளன.

பேட்மிண்டன்: பாரா ஆசிய பேட்மிண்டன் போட்டியில் SL4 பிரிவில் சுகாஸ் எத்திராஜ் தங்கம் வென்று உள்ளார். SH6 பிரிவில் கிருஷ்ண நாகர் வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளார். SL3 பிரிவில் பிரமோத் பகாத் தங்கமும், SL3 பிரிவில் நிதிஷ் வெள்ளி வென்று உள்ளனர்.

மகளிருக்கான SU5 பிரிவில் துளசிமதி முருகேசன் தங்கம் வென்று உள்ளார். இருவர் விளையாடும் மகளிருக்கான SL3 - SU5 பிரிவில் மானாசி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் ஜோடி இருவரும் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளனர்.

இரண்டு பேர் கொண்ட பேட்மிண்டன் போட்டியில் SL3-SL4 பிரிவில் தருண் மற்றும் நிதிஷ்குமார் ஜோடி தங்கம் வென்று உள்ளனர். SU5 பிரிவில் ராஜ் குமார் மற்றும் சீராக் ஜோடி இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்று உள்ளனர்.

  • 🥈 Another Stunning Silver for India! 🇮🇳@ChiragBaretha and @Rajkuma29040719 clinch the silver in Badminton - Men's Doubles SU5 in a thrilling match against Indonesia's Hafizh and Dheva.✨🏆🥈💪

    👏 Congratulations to these champions for making India proud! 🏸🥈🇮🇳… pic.twitter.com/qK0LQs192D

    — SAI Media (@Media_SAI) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வில் வித்தை: மகளிருக்கான வில் வித்தை போட்டியில் சீடால் தேவி, சிங்கப்பூர் விராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று உள்ளார் மற்றும் ஆடவருக்கான வில் வித்தை போட்டியில் ராகேஷ் குமார் வெள்ளிப்பதக்கத்தை வென்று உள்ளார்.

ஓட்டப்பந்தயம்: 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் T38 பிரிவில் ராமன் ஷர்மா தங்கம் வென்று சாதனை புரிந்து உள்ளார்.

  • 🥇 Golden Glory Strikes Again for 🇮🇳 at #AsianParaGames

    🏸 Suhas Yathiraj, our unstoppable force in Badminton, clinches the third Gold for 🇮🇳 in Badminton by emerging victorious in Men's Singles SL-4 category. His incredible performance against Malaysia's Mohd Amin, with a score… pic.twitter.com/uIu9c8FTfj

    — SAI Media (@Media_SAI) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

எறிதல்: ஆடவருக்கான F54 பிரிவில் பிரதீப் குமார் வெள்ளிப்பதக்கமும், லக்சிட் வீராங்கனை வெண்கலப்பதக்கமும் வென்று உள்ளனர். மகளிருக்கான எறிதல் F 37/38 பிரிவில் லக்‌ஷ்மி வெண்கலம் வென்று உள்ளார்.

இதையும் படிங்க:கனடாவிலிருந்து இந்தியா செல்வதற்கான விசா சேவை இன்று முதல் தொடக்கம்.. ஆனால் குறிப்பிட்ட விசாக்களுக்கு மட்டுமே அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.